Jiiva: சிவா மனசுல சக்தி பார்ட் 2 உருவாகிறதா? வைரலாகும் ஜீவாவின் பதிவு!
Jiivas X Post : தமிழில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜீவா. தற்போது ஜீவாவின் நடிப்பில் ஜீவா47 திரைப்படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்தை குறித்து, நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films). இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளராக ஆர். பி. சௌத்ரி (R.P.Choudhary) தொடர்ந்து படங்ககளை தயாரித்து வருகிறார். அவரின் மகன்தான் நடிகர் ஜீவா (Jiiva). இவர் தனது தந்தை ஆர். பி. சௌத்ரியின் தயாரிப்பில் வெளியான படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார். பின் ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்த வகையில், இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் பல்வேறு நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இந்நிலையில், இவரின் நடிப்பில் தற்போது ஜீவா47 (Jiiva47) என்ற திரைப்படமானது உருவாகிவருகிறது.
இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் (M. Rajesh) இயக்கிவருகிறார். மேலும் இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja ) இசையமைத்து வருகிறார். இந்த மூவரின் கூட்டணி ஏற்கனவே “சிவா மனசுல சக்தி” என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை அனுயா பகவத் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படமானது வெளியாகி 16 வருடங்களான நிலையில், மீண்டும் இந்த ஜீவா47 படத்தில் இணைந்துள்ளது.
இதையும் படிங்க : 14 ஆண்டுகளை நிறைவு செய்தது அஜித் குமாரின் மங்காத்தா படம் – கொண்டாட்டத்தில் படக்குழுவினர்
இந்நிலையில், நடிகர் ஜீவா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் எம். ராஜேஷ், ஜீவா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா மூவரின் கூட்டணியில் சிவா மனசுல சக்தி பார்ட் 2 படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சிவா மனசுல சக்தி படம் குறித்து நடிகர் ஜீவா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
1️⃣6️⃣ Years an Iconic Trio and another Timeless Film🥳
On this special U1 day🔥, @malikstreams happily announces their next mega project featuring 🎬 @jiivaofficial
Directed by @rajeshmdirector & music by @thisisysr @S2MediaOfficial @prosathish #Jiiva47withRajeshm… pic.twitter.com/68Re4oOYNf— Jiiva (@JiivaOfficial) August 31, 2025
இந்த பதிவில், நடிகர் ஜீவா , சிவா மனசுல சக்தி படமானது வெளியாகி 16 ஆண்டுகளை கடந்ததாகவும், பின் மீண்டும் இந்த படத்தின் கூட்டணி இணைந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்நிலையில், தற்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்திலும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பிலும் மற்றும் நடிகர் ஜீவாவின் நடிப்பிலும் ஜீவா47 படமானது தயாராகிவருகிறது.
இதையும் படிங்க : பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
இந்நிலையில், இந்த படமானது ஒருவேளை, சிவா மனசுல சக்தி படத்தின் பார்ட் 2 படமாக இருக்கிறதா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழும்பியுள்ளது. மேலும் இந்த வீடியோவில் ஜீவாவின் இந்த புதிய படத்தின் அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிவா மனசுல சக்தி படத்தின் பார்ட் 2 படமாக, இது இருந்தால் நிச்சயமாக பெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.