14 ஆண்டுகளை நிறைவு செய்தது அஜித் குமாரின் மங்காத்தா படம் – கொண்டாட்டத்தில் படக்குழுவினர்
Mankatha Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் மாபெரும் வெற்றிப் பெற்ற மங்காத்தா படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மங்காத்தா. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அப்போது படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தில் வரும் ட்விஸ்டிற்கு திரையரங்கம் அதிகர கத்தினர் என்பது தற்போது வரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் சர்ஜா, திரிஷா கிருஷ்ணன், லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், அஸ்வின் கக்குமானு, பிரேம்ஜி அமரன், மஹத் ராகவேந்திரா, ஜெயபிரகாஷ், அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, ரவிகாந்த், பாய்ஸ் ராஜன், ரம்யா சுப்ரமணியன், விஜய் வசந்த், டெபி தத்தா, கைனாட் அரோரா, ரேச்சல் ஒயிட், திபாலி சிங், சக்தி சரவணன், ரமேஷ் திலக் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான க்ளவுட் நயன் மூவிஸ் சார்பாக தயநிதி அழகிரி மற்றும் விவேக் ரத்னவேல் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல படல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மங்காத்தா படத்தின் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட வெங்கட் பிரபு:
நடிகர் அஜித் குமார் மங்காத்தா படத்தில் நாயகனா அல்லது வில்லனா என்ற குழப்பத்துடன் இருக்கும் ரசிகர்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆம் இவ்வளவு அழகான வில்லனை யாருக்குதான் பிடிக்காது. மங்காத்தா படத்தில் முதல் பாதியில் மிகவும் நல்லவராக தெரியும் அஜித் இரண்டாம் பாதியில் படு வில்லனாக காட்சியளிப்பார்.
பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நபராக இருக்கும் அஜித் குமார் எப்படி தன்னுடன் இருப்பவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கிறார் என்பதே கதை. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எல்லாம் திரையரங்குகள் ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது என்றே கூறவேண்டும்.
இந்த நிலையில் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரீ ரிலீஸாகும் மாதவனின் சூப்பர் ஹிட் படம் ரன் – படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!
வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Time flying!!! #14YearsOfMankatha #Thala50 #aVPgame this is how it all started!! @thisisysr #sakthisaravanan #stuntsilva #pkl #Premgi #vasuki #SunPictures #cloudninemovies pic.twitter.com/WEi62K9jay
— venkat prabhu (@vp_offl) August 31, 2025
Also Read… தீமைதான் வெல்லும் என்ன நினைத்தாலும் – 10 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தனி ஒருவன் படம்