காமெடியும் ஃபேண்டசியும் கலந்த இந்த படகலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Padakkalam Movie: ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் ஒரு ஜானர் ப்ளாக் காமெடி. அந்த ப்ளாக் காமெடி உடன் ஃபேண்டசியும் இணைந்து வரும் போது ரசிகர்களை அந்தப படத்தை கொண்டாடுவார்கள். அப்படி ப்ளாக் காமெடி ஃபேண்டசி படமாக மலையாள சினிமாவில் வெளியான படம் படக்கலம்.

மலையாள சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு ஒரு ஜானரில் படம் வெற்றி அடைந்தால் அதனையே மையமாக வைத்து மற்றப் படங்கள் தொடர்ந்து வெளியவதில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்யாசம் காட்டுவதாலே மலையாள சினிமா இந்திய சினிமாவில் சிறந்த படங்களை தொடர்ந்து வழக்குவதில் சிறப்பாக விளங்குறது. இவர்கள் எடுக்கும் காமெடிப் படங்கள் மலையாள சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஃபேண்டசி கலந்து எடுக்கப்படும் காமெடிப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் இப்படி ஒரு ஜானரில் வெளியான படம் தான் படக்கலம். மலையாள சினிமாவில் கடந்த மே மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது படகலம்.
இந்தப் படத்தை இயக்குநர் மனு ஸ்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, ஷரஃப் யு தீன், சந்தீப் பிரதீப், சாஃப், அருண் அஜித்குமார், அருண் பிரதீப், நிரஞ்சனா அனூப், பூஜா மோகன்ராஜ், இஷான் ஷௌகத், ஷாஜு ஸ்ரீதர், லக்கித் சைனி, நஹாஸ் ஹிதாயத், விஜய் பாபு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே வகையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இந்தப் படம் மேலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
படகலம் படத்தின் கதை என்ன?
ப்ளாக் காமெடி மற்றும் ஃபேண்டசி கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படகலம் கல்லூரியில் இரண்டு ப்ரஃபசர்கள் மற்றும் ஒரு மாணவர் குழு இடையே நடைப்பெறும் மாந்திரீகம் தொடர்பான கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அதன்படி கல்லூரியில் சுராஜ் வெஞ்சாரமூடு, ஷரஃப் யு தீன் இருவரும் ஃபரஃபசர்களாக இருக்கிறார்கள்.




இவர்களின் டிபார்ட்மெண்டில் இருக்கும் HOD-யை மாற்றவேண்டும் என்று மாணவர்கள் போராடுகிறார்கள். இதனால் அவரை மாற்றினால் அடுத்ததாக யார் தலைமை பொருப்பை ஏற்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஷரஃப் யு தீன் பேசி சுராஜ் வெஞ்சாரமூடு கூறுகிறார்.
Also Read… சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!
ஆனால் அதன்பிறகு சுராஜ் வெஞ்சாரமூடுவை தனது மாந்திரீக சக்தியால் ஷரஃப் யு தீன் அந்த பதவியில் இருந்து தூக்கவைத்துவிட்டு அவர் அந்தப் பதவியை ஏற்கிறார். இவர் மாந்திரீகம் மூலம் கட்டுப்படுத்துவதை மாணவர் ஒருவர் பார்த்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
படக்கலம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
Also Read… யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி