Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dude : ‘ஊரும் பிளட்’.. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தின் அதிரடி முதல் சிங்கிள் இதோ!

Dude Movie First Song : பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 4வதாக உருவாகியிருக்கும் படம் டியூட். இந்த படமானது தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலானது வெளியாகியுள்ளது. இந்த பாடல்தான் சாய் அபயங்கரின் இசையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் முதல் பாடல்.

Dude : ‘ஊரும் பிளட்’.. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தின் அதிரடி முதல் சிங்கிள் இதோ!
டியூட் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2025 18:35 PM

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் (Keerthiswaran) இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டியூட் (Dude). இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமானது அவர் ஹீரோவாக நடித்திருக்கும் 4வது திரைப்படமாகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் கீர்த்தீஷ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்தது வருகிறார். இவரின் இசையில் டியூட் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ராப் பாடகர் பால் டப்பாவில் குரலில், “ஊரும் பிளட்” (Oorum Blood) என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. லோகா திரைப்படம் எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அவரின் இசையமைப்பில் முதல் பாடலாக வெளியாகியிருக்கிறது இந்த ஊரும் பிளட் பாடல். தற்போது இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட டியூட் படம் முதல் பாடல் பதிவு :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜுவின் முன்னணி நடிப்பில் இந்த டியூட் படமானது உருவாகியிருக்கிறது. இப்படத்தின்ஸ் ஷூட்டிங் கடந்த 2025, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமானது. இந்நிலையில், கிட்டத்தட்ட 4 மாதங்களில் இந்த படமானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க : எதிரி யாருன்னு யோசிக்காம சண்டை செய்யனும் – ஹரிஷ் கல்யாணின் டீசல் பட டீசர் இதோ!

இந்த படத்தின் ஷூட்டிங் நிறுவடைந்ததாக கூறப்படும்ம் நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் இருந்து வருகிறது. இந்த டியூட் படமானது காதல், பிரெண்ட்ஷிப் மற்றும் அதிரடி ஆக்ஷன் போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம்.

டியூட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி :

இந்த டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி மற்றும் ஹிருது ஹூரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஆரம்பத்தில் வரும் 2025ம் ஆண்டி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் பிரதீப் ரங்கநாதனின் 3வது படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்மும் தீபாவளியை முன்னிட்டு 2025, அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மேலும் இந்த டியூட் திரைப்படம் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.