Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!

Tourist Family director Abhishan Jeevinth: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இந்த நிலையில் இவர் நாயகனாக அறிமுகம் ஆக உள்ள படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!
படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Aug 2025 14:38 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளாக ரசிகர்களிடையே நன்கு அறிமுகம் ஆனவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். படைப்பய்யா படத்தில் இருந்து சுமார் 9 படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் படத்தையும் நடிகர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் முழுக்க முழுக்க டெக்னாலஜியை பயன்படுத்தி இருந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். மேலும் இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் நாயகியாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிராஃபிக் டிசைனர் மற்றும் இயக்குநராக மட்டும் இன்றி தற்போது தயாரிப்பாளராக வலம் வருகிறார். அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான கோவா படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டும் இன்றி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதுகுறித்த புகைப்படங்களையும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் டூ நடிகர்… அபிஷன் ஜீவிந்தின் அடுத்த அவதாரம்:

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரிடம் பாராட்டைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து அடுத்து இவர் என்னப் படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகராக நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி அபிஷன் ஜீவிந்த் உடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார். மேலும் இந்தப் படத்தில் ராங்கி படத்தில் த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்த அனௌஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே பாடலின் லிரிக்கள் வீடியோ!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!