Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!

Baahubali - The Epic Teaser | நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!
பாகுபலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2025 18:18 PM

ஒரு படத்தை இயக்கியதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலக அளவில் பிரபலம் ஆக்கியவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி (Director Rajamouli). தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பாவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கஜாலா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தொடர்ந்து சிக்ஹத்ரி, சை, சத்ரபதி, விக்ரமார்குடு, யமதோங்க, மஹதீரா, மர்யதா ராமன்னா, ஈகா, பாகுபலி தி பிகினிங்ஸ், பாகுபலி தி கன்குலூஷன், ஆர் ஆர் ஆர் என தொடர்ந்து 12 படங்களை இயக்கி உள்ளார் எஸ்.எஸ். ராஜமௌலி.

இவது இயக்கத்தில் வெளியான ஈகா படம் முன்னதாக தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் நான் ஈ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்திய சினிமாவில் சாதனைப் படத்தைது போல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வெளியான பாகுபலி தி பிகினிங்ஸ், பாகுபலி தி கன்குலூஷன் ஆகிய படங்கள் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்திய சினிமாவை உலக அளவில் பெருமைப் படுத்தியதில் இந்தப் படத்தின் பங்கு அதிகம் என்று ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா பிரபலங்களும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸ் ஆகும் ராஜமௌலியின் சூப்பர் ஹிட் படம்:

இந்த நிலையில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாகுபலி தி பிகினிங்ஸ். நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்த இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வெளியிட உள்ளதாக இயக்குநர் ராஜமௌலி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

அதன்படி இந்தப் படம் குறித்து முன்னதாக இயக்குநர் ராஜமௌலி பேசிய போது இந்த இரண்டு பாகங்களின் மொத்த டியூரேஷன் 11 மணி நேரங்கள் எடுத்ததாகவு. படத்தின் இரண்டு பாகங்களில் இல்லாத காட்சிகளை அதிகமாக வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் படத்தின் டீசர் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read… ரவி மோகன் சார் படம் தயாரிப்பதில் நான் உங்க சீனியர்… கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்

பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு:

Also Read… சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனியா – ரவி மோகன்