Lokah Chapter 1: சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. வெளியானது ‘லோகா’ படத்தின் அசத்தல் ட்ரெய்லர்!
Lokah Movie Trailer Release :தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மற்றும் நடிகர் நஸ்லென் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் லோகா சாப்டர் : 1 சந்திரா. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் பிரியதர்ஷன் (Priyadarshan). இவரின் மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) இயக்கியுள்ள படம்தான் லோகா சாப்டர் 1 : சந்திரா. இப்படத்தை வெஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி நாயகியாக நடிக்க, அவருடன் நடிகர் நஸ்லென் (Naslen) முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்த லோகா திரைப்படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகியிருக்கிறது.
இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 28ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : ஆக்ஷன் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்… ஆண்டனி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
லோகா படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :
Enter the world of Lokah.
Trailer of Lokah, Chapter 1: Chandra out now ✨Trailer Link :
https://t.co/xLWc1KMLpn@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @AKunjamma#Lokah #TheyLiveAmongUs #WayfarerFilms— Wayfarer Films (@DQsWayfarerFilm) August 24, 2025
லோகா சாப்டர் : 1 சந்திரா என அழைக்கப்படும் இதில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் நஸ்லென், சாண்டி மாஸ்டர், விஜயராகவன், நித்யஸ்ரீ உட்பட பல பிரபலங்கள் நடித்திருகின்றனர். மேலும் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸும் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரத்தம் தெறிக்க தெறிக்க.. ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன்.. வெளியானது மதராஸி படத்தின் ட்ரெய்லர்!
இந்த லோகா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பதற்கு ஹாலிவுட் படங்ககளை போல இருக்கிறது. இப்படம்தான் தென்னிந்தியாவில் முதல் பெண் சூப்பர் வுமன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் படம் என்றும் கூறப்படுகிறது.
லோகா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது :
இந்த லோகா படமானது முற்றிலும் அசத்தல் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. நடிகர் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் ஏற்கனவே மாநாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து ரவி மோகனுடன் ஜீனி என்ற படத்திலும் நடிகர் கார்த்தியுடன் மார்ஷல் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஜீனி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.
மேலும் இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த லோகா படம் வரும் 2025, ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு நாளை 2025, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் கேரளாவில் தொடங்குகிறது. மேலும் தமிழகத்தில் இப்படத்தின் முன் பதிவும் நாளை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.