Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : சிவகார்த்திகேயனின் மதராஸி பட 2வது பாடல் வெளியானது!

Madharaasi Movie Vazhiyiraen Song: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் மதராஸி. இப்படத்திலிருந்து வழியிறனே என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Madharaasi : சிவகார்த்திகேயனின் மதராஸி பட 2வது பாடல் வெளியானது!
சிவகார்த்திகேயன் - ருக்மிணி வசந்த்
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2025 20:02 PM

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கத்திலும், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் மதராஸி (Madharaasi). இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு SK XARM என அறிவிக்கப்பட்டது. இப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தில் அவர் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஏஸ் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, இந்த மதராஸி படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது , அனிருத்தின் குரலில் “வழியிறனே” (Vazhiyiraen ) என்ற இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : காலத்தால் அழியாதவை.. ரஜினிகாந்த்தை சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி!

மதராஸி படக்குழு வெளியிட்ட இரண்டாவது பாடல்

 

மதராஸி திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் விக்ராந்த் , பிஜூ மேனன், வித்யுட் ஜம்மவால், ஷபீர் கல்லரக்கல், பிரேம் குமார் மற்றும் தலைவாசல் விஜய் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : ‘விஷால்35’ படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? இயக்குநர் ரவி அரசு வெளியிட்ட அப்டேட்!

இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அவரும் 2025, ஆகஸ்ட் 24 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவானது சென்னை நேரு உள் அரங்கத்தில் வைத்து நடைபெறவுள்ளதாம். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்பார்ப்பில் மதராஸி திரைப்படம்

இந்த மதராஸி படமானது மிகப் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமரன் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் முழுமையாக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் இந்த மதராஸி படத்தில் நடித்துள்ளாராம். இப்படமானது காதல் , அதிரடி ஆக்ஷன் போன்ற மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இதன் காரணமாக இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.