Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AR Murugadoss: மதராஸியில் மாறுபட்ட சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விஷயம்!

AR Murugadoss About Sivakarthikeyan Role In Madharaasi Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மதராஸி. இப்படத்தில் இவர் இரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

AR Murugadoss: மதராஸியில் மாறுபட்ட சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விஷயம்!
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2025 12:45 PM

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் 22 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான அமரன் (Amaran) படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது . இதில் சிவகார்த்திகேயனை விடவும் சாய் பல்லவியின் நடிப்பே மிகவும் புகழப்பட்டது. இப்படத்தை அடுத்ததாக இவர் நடித்துவந்த படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்த இப்படமானது, பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. இதற்கு முன் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸின் எழுத்தில் உருவான “மான் கராத்தே” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த மதராஸி படத்தில் சிவகார்திகேயனுடன், நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்துள்ளார். இந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இரு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக இயக்குநர் ஏ ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : விஜய்யுடன் ஒரு படம்.. மிஸ்ஸான வாய்ப்பு – இயக்குநர் AR முருகதாஸ்!

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் பற்றி பேசிய ஏ.ஆர். முருகதாஸ் :

சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.  அவரிடம் படம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சிறப்பான பதிலை தெரிவித்திருந்தார். அந்த விதத்தில், அவர் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தை பற்றியும் தெளிவுப்படுத்தியிருந்தார். ” மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் “ரகு” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், சாதாரண கதாபாத்திரம் போல இப்படத்தில் அவர் நடிக்கவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க : கூலியில் மோனிகா பாடல் வைக்க காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இரு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளாராம். 6 மாதத்திற்கு முன் மற்றும் காதல் தோல்விக்கு பின், அதிக தாடியுடனும் மற்றும் தாடி குறைவான லுக்கில் நடித்துள்ளார். இந்த இரு தோற்றமும் நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கும் எனவும்  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அதில் தெரிவித்திருந்தார்.

மதராஸி அப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் அறிவிப்பு :

இந்த மதராஸி படமானது முழுக்க அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், பைஜூ மேனன், வித்யுத் ஜம்மவால் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 2025, ஆகஸ்ட் 24ம் தேதியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.