இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல் ஐரிஷ் டெனா மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் குறைந்தது 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 2026 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இண்டர்நேஷனல் ஃப்ளீட் ரிவியூ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இலங்கை தெற்குக் கடற்பரப்பில் இந்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.