அமெரிக்கா மற்றும் ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குவைத் துறைமுகம் அருகே எண்ணெய் டேங்கர் அருகில் பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் நாட்டின் முபாரக் அல் கபீர் துறைமுகம் அருகே நங்கூரமிட்டு இருந்த எண்ணெய் கப்பல் அருகே திடீரென பெரிய வெடி சத்தம் கேட்டது. இந்த சம்பவம் இந்திய நேரப்படி மார்ச் 5 அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. வெடிப்பு ஏற்பட்ட உடனே அந்த கப்பலின் கேப்டன், கப்பலின் அருகிலிருந்து ஒரு சிறிய விமானம் அல்லது ட்ரோன் போன்ற பொருள் அங்கிருந்து விலகிச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.