Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனான ஆதி… வைரலாகும் தகவல்!

Karthi Marshal Movie: கோலிவுட் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மார்ஷல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனான ஆதி… வைரலாகும் தகவல்!
மார்ஷல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2025 13:21 PM

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்தி (Actor Karthi). தற்போது தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார். இவர் இறுதியாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். முழுக்க முழுக்க ஃபீல் குட் படமாக உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து கங்குவா மற்றும் ஹிட் 3 ஆகிய படங்களில் கேமியோ செய்து இருந்தார் நடிகர் கார்த்தி. இதனைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடிக்கும் சர்தார் 2, மார்ஷல் மற்றும் வா வாத்தியார் ஆகியப் படங்களின் பணிகளில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து இந்தப் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

கார்த்தியின் மார்ஷல் படத்தில் வில்லனான ஆதி:

அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் தமிழ் எழுதி இயக்கி வருகிறார். இவர் முன்னதாக டாணாக்காரன் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மார்ஷல் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் தமிழ்.

இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பலப் படங்களில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மார்ஷல் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் படத்தின் வில்லனாக முன்னதாக நிவின் பாலி மற்றும் ஜீவா இருக்கும் என்று தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் ஆதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also Read… மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி? வைரலாகும் தகவல்

மார்ஷல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya : சூர்யாவின் 47வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. அப்ப நிச்சயம் கொண்டாட்டம்தான்!