Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : சூர்யாவின் 47வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. அப்ப நிச்சயம் கொண்டாட்டம்தான்!

Suriya 47 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் தெலுங்கில் சூர்யா46 படம் உருவாகிவருகிறது. இப்படத்தை அடுத்து, மலையாள படமான ஆவேசம் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

Suriya : சூர்யாவின் 47வது படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. அப்ப நிச்சயம் கொண்டாட்டம்தான்!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Aug 2025 19:26 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா (Suriya). தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் இவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவர் பிற மொழிகளில் படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இப்படமானது சூர்யாவிற்கு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படம் மொத்தமாக சுமார் ரூ 235 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதை அடுத்து. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 (Suriya46) படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை அடுத்து ஆவேசம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படத்திற்கு மலையாள பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளாராம். ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூரவ அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சூர்யா 46 படத்தில் அனில் கபூரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கி அட்லூரி

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் இன்ஸாகிராம் பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Sushin Shyam (@sushintdt)

நடிகர் சூர்யா, மலையாள இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் சூரிய 47 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் மற்றும் க்ரீன் ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : காந்தாரா 2வில் குல்ஷனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!

சிங்கம் 3 படத்தை அடுத்து இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் மலையாள இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 47 படமும் மக்களிடையே வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் ஆரம்பமான நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதியில் இப்படத்தில் சூர்யா இணைவார் என கூறப்படுகிறது.

கருப்பு மற்றும் சூர்யா 46 திரைப்படம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படமானது வெளியீட்டிற்குக் கடத்திருக்கிறது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, நடிகை திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படமானது வரும் 2025 தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்தாக சூர்யா46 படத்தின் ஷூட்டிங்கும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.