Rashmika Mandanna : ராஷ்மிகா மந்தனாவின் ‘தமா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ!
Thama Movie Glimpse : பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவரின் முன்னணி நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம்தான் தமா. இந்த படத்தில் முதல் பார்வை சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) நடிப்பில் இந்திய அளவில் பல்வேறு மொழிகளிலும் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவரின் நடிப்பில், இந்க 2025 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம்தான் தமா (Thama). இந்த படமானது முற்றிலும் ஹாரர் மற்றும் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தைப் பாலிவுட் இயக்குநர் ஆதித்ய சர்போதார் (Aditya Sarpotdar) இயக்கியுள்ளார். அந்த வகையில், தனுஷின் குபேரா படத்தை அடுத்து இப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த தமா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, முன்னணி கதையாகியாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ப்ரெஷ் ராவல் மற்றும் ஆயுஷ்மான் குரானா (Ayushmann Khurrana) முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களில் அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி காதல் மற்றும் ஹாரர் கதைக்களத்துடன் இப்படமானது உருவாகியிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்கபை பெற்று வருகிறது.




இதையும் படிங்க : இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்? இயக்கப்போகும் மாஸ் இயக்குநர்.. புது தகவலால் அதிரும் கோலிவுட்!
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தமா படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ பதிவு :
This is only the beginning guys.. 🔥❤️
I really hope you guys enjoy this one.. there’s a lot more waiting for you 🫶🏻🔗- https://t.co/A2vKN81Jgb#WorldOfThama #ThamaThisDiwali@ayushmannk @SirPareshRawal @Nawazuddin_S #DineshVijan @amarkaushik @AdityaSarpotdar @nirenbhatt… pic.twitter.com/F9472wxIyX
— Rashmika Mandanna (@iamRashmika) August 19, 2025
தமா படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த தமா திரைப்படமானது முற்றிலும் பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த இடமானது ஹாரர் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அதிரடி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படமானது வரும் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாம். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் இப்படத்தின் டிரெய்லரும் மிக விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு அப்டேட்டை வழங்கியிருக்கிறது. தற்போது இந்த தகவலானது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மதராஸி படத்தின் டைட்டில் என்னோட சாய்ஸ்தான்.. உண்மையை உடைத்த ஏ.ஆர். முருகதாஸ்!
ராஷ்மிகா மந்தனாவின் புதிய திரைப்படங்கள் :
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா. தனுஷின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தமா படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டி மற்றும் வட இந்தியா போன்ற இடங்களில் நடைபெற்றிருந்தது. இதை அடுத்ததாக இவர் மைசா என்ற படத்திலும் நடிக்கவுள்ளாராம். இப்படமானது பெண் கதாபாத்திரங்களை வைத்து உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் லீட் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.