மதராஸி படத்தின் டைட்டில் என்னோட சாய்ஸ்தான்.. உண்மையை உடைத்த ஏ.ஆர். முருகதாஸ்!
AR Murugadoss About Madharaasi Title : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்குப் பின், தமிழில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் படம் மதராஸி. சிவகார்த்திகேயனின் இப்படத்தின் டைட்டிலுக்கான காரணம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது ஆரம்பத்தில் SK XARM என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து ஷூட்டிங்கும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் இப்படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் பெயரில் தமிழில் ஏற்கனவே அர்ஜுன் நடித்த படம் ஒன்று வெளியாகியிருந்தது. அதன் காரணமாக இப்படத்தின் டைட்டில் மீது விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அந்த டைட்டிலை தேர்ந்தெடுப்பதற்கு என்ன கரணம் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.




இதையும் படிங்க : கூலி படத்தில் வில்லனாக மிரட்டிய நாகார்ஜுனா..! தமிழ் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
மதராஸி பட டைட்டில் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம் :
மதராஸி படம் வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் துவங்கியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்துகொண்டார். அவரிடம் உங்கள் படத்தில் பழைய படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறீர்கள்? அதன் காரணம் என்ன எனக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் , ” மதராஸி என்ற டைட்டில் 100 சதவீதம் என்னுடைய விருப்பம்தான். இப்போது அது சாதாரணமாக மாறிவிட்டது, ஏனென்றால், சில பழைய டைட்டிலும் நன்றாகதான் இருக்கும், எடுத்துக்காட்டாகக் கூறவேண்டும் என்றால் தனுஷின் அசுரனும் பழைய பட டைட்டில்தான்.
இதையும் படிங்க : தமிழ் படங்கள் ரூ.1000 கோடிகள் வசூலிக்காததற்குக் காரணம் இதுதான்- ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!
இவ்வாறு பழைய பட டைட்டிலை வைக்கும்போது, ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், கொஞ்சம் பழகியபிறகு சாதாரணமாக மாறிவிடும். அதனால் பழைய படங்களின் டைட்டிலை, தற்போது பயன்படுத்துவது சாதாரணமாக இருந்து வருகிறது. மேலும் எனது படத்தில் ஒரு வார்த்தையின் டைட்டில் வைப்பதற்குக் காரணம், அந்த படங்களின் போஸ்டர்களை பார்ப்பவர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் மனதில் பதியவேண்டும் என்பதற்குத்தான்” எனவும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருந்தார்.
மதராஸி படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் பதிவு :
Big week.
Important week.
It begins 🚀#Madharaasi – in theatres from September 5 💥 pic.twitter.com/dUOeM9gia8— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 18, 2025
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் ரிலிஸ் வரும் 2025 , செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது. இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் அறிவிப்புகள் இந்த வாரத்தில் வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது. படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் இந்த வாரத்தில் வெளியாகலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.