சிவகார்த்திகேயனின் மதராஸி படக்குழு வெளியிட்ட புதிய எக்ஸ் தள பதிவு!
Madharaasi Movie: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படக்குழு தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் இறுதியாக வெளியான படம் அமரன். படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போதே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் அன்று இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் பொறுமையாகவே நடந்து வந்தது. காரணம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி சினிமாவில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படத்தை இயக்குவதில் பிசியாக இருந்தார்.
இதற்கு இடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படத்தில் நடிக்க கமிட்டானார். இந்தப் படத்தின் பணிகளில் பிசியாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்துவந்த நிலையில் சிக்கந்தர் படத்தின் பணிகளை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் வந்த உடன் அவரது படத்திலும் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. இந்தப் படத்திற்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.




மதராஸி படத்தின் மாஸ் அப்டேட் இதோ:
அதன்படி படத்தின் வெளியீட்டு பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளது. அதில் இது பெரிய வாரம், முக்கியமான வாரம், இது ஆரம்பித்துவிட்டது என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்… இன்ஸ்டாகிராமில் வைரலாகும் மீனாட்சி சௌத்ரியின் போட்டோஸ்!
மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Big week.
Important week.
It begins 🚀#Madharaasi – in theatres from September 5 💥 pic.twitter.com/dUOeM9gia8— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 18, 2025
Also Read… ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கும் மாமன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!