Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்

AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. அதில் அவரது இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தை இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்
துப்பாக்கிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2025 15:49 PM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss) இயக்கத்தில் கடந்த 13-ம் தேதி நவம்பர் மாதம் 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் துப்பாக்கி. மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையையும் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யன், வித்யுத் ஜம்வால், ஜெயராம், மனோபாலா, ஜாகீர் உசேன், ரனீஷ், மீனாட்சி, சங்கர நாராயணன், தீப்தி நம்பியார், அனுபமா குமார், கவுதம் குருப், எம்டி ஆசிஃப், சஞ்சனா, மங்கள ராதாகிருஷ்ணன், அக்ஷரா கவுடா, பிரயாஸ் மான், பிரசாந்த் நாயர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி பாகம் 2 வருமா? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது தனது இயக்கத்தில் வெளியான எந்தப் படத்தை இரண்டாம் பாகம் எடுக்க முடியும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவரது இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தை இரண்டாம் பாகம் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அதில் அந்தப் படத்தைப் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான எண்ணத்துடனே அதனை எடுத்ததாகவும், அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியும் அதனை மனதில் கொண்டே எடுத்ததாகவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… Parasakthi : பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… சிறப்பு ரோலில் நடிக்கும் பிரபலங்கள்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்:

Also Read… Sasikumar : மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி – சசிகுமார் நெகிழ்ச்சி!