Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie: மாஸ் ஹிட்.. வசூலை வாரிக்குவிக்கும் கூலி.. முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?

Coolie Movie 1st Day Collection : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியப் படமாக வெளியாகியிருப்பது கூலி. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், முதல் நாளில் இப்படமானது உலகளாவிய வசூலில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Coolie: மாஸ் ஹிட்.. வசூலை வாரிக்குவிக்கும் கூலி.. முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?
ரஜினிகாந்த் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Aug 2025 16:04 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் பான் இந்தியப் படமாக வெளியாகியிருப்பது கூலி (Coolie). இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் இணைந்த திரைப்படம்தான் கூலி. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பான் இந்தியப் பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். மொத்தத்தில் ஒரு கேங்ஸ்டர்ஸ் கதைக்களம் கொண்ட படமாக இப்படம் அமைந்திருந்தது.

திரையரங்குகளில் ரசிகர்களை மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அந்த விதத்தில் இப்படமானது முதல் நாளில் உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இப்படமானது முதல் நாளில் உலகளாவிய வசூலில் சுமார் ரூ.151 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இது குறித்துப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இணையத்தில் கசிந்தது ரஜினிகாந்தின் கூலி… அதிர்ச்சியில் படக்குழு

கூலி படக்குழு வெளியிட்ட முதல் நாள் வசூல் விவரம் :

இந்த கூலி படமானது ஒரே நாளில் சுமார் ரூ.151 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முதல் நாளை அதிகம் வசூல் செய்த படமாக இந்த கூலி திரைப்படமானது உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படமானது சுமார் ரூ.355 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளதாம். இந்நிலையில், முதல் நாளிலே சுமார் ரூ 151 கோடிகளைக் கடந்த நிலையில், சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் சுமார் ரூ.300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

இதையும் படிங்க : தென்னிந்தியப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – பூஜா ஹெக்டே பேச்சு!

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் :

இந்த கூலி படமானது வெளியீட்டிற்கும் முன்னே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தில் ஒன்றாக இருந்தது. இந்த படத்துடன் இந்தியில் வார் 2 என்ற திரைப்படமும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் நிச்சயமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதைப்போலப் போட்டிப் போட்டு வருகிறது. இப்படமானது ரிலீசாகுவதற்கு முன்னே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதுதான், இப்படத்தில் கலவையான விமர்சனங்களுக்குக் காரணம் என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதி ஹாசன், உபேந்திர ராவ், சவுபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்களும் இணைந்த நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.