Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : என்னோட விஷனில் ரஜினிகாந்த் சார் இப்படித்தான்.. கூலி படத்தினை குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்!

Lokesh Kanagaraj About Rajinikanths Coolie Movie Character : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் வெளியாகியிருப்பது கூலி திரைப்படம். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை உருவாக்கியதை பற்றி அவர் பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Lokesh Kanagaraj : என்னோட விஷனில் ரஜினிகாந்த் சார் இப்படித்தான்.. கூலி படத்தினை குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்!
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Aug 2025 23:23 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது, முழுவதும் ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி திரைப்படங்கள்தான். மேலும் விஜய்யின் (Vijay) நடிப்பில் மட்டுமே இவர், இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் தளபதி விஜய் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை உச்ச நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்த படம்தான் கூலி (Coolie). இப்படம் தலைவர் 171 எனக் கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். இந்த படமானது 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் உருவாக்கியதை பற்றி லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். அந்த குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : விக்ரமில் ரோலக்ஸ் போல.. கூலியில் வரவேற்பைப் பெற்றதா ஆமிர்கானின் கதாபாத்திரம் ?

ரஜினிகாந்த் கதாபாத்திரம் உருவாக்கத்தைப் பற்றி லோகேஷ் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும் பேசிய அவர், “கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சாரின் கதாபாத்திரத்தை, என்னுடைய பார்வையில் ரஜினிகாந்த் சாரை எவ்வாறு நினைத்து வைத்திருக்கிறேனோ, அதுபோல கொண்டு வந்திருக்கிறேன். மேலும் இந்த படம் பயங்கரமான எக்பீரிமெண்டல் திரைப்படமாக உருவாகியிருக்கும்.

மேலும் இப்படம் எல்.சி.யு. என அனைவரும் கூறுகின்றனர். அதுபோல இப்படம் கிடையாது. இந்த படமானது தனித்துவமான திரைப்படமாக இருக்கும்” என அவர் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் கூலி திரைப்படமானது வெளியாகிவிட்டது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்யவில்லை எனவும் பலதரப்பு ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த கூலி படமானது ஒரு கலவையான விமர்சனங்களைப் பெற்ற படமாக வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க : தென்னிந்தியப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – பூஜா ஹெக்டே பேச்சு!

லோகேஷ் கனகராஜா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

கூலி திரைப்படத்தின் வசூல் எதிர்பார்ப்பு ;

இந்த கூலி திரைப்படமானது மொத்தத்தில் சுமார் ரூ 355 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஓடிடி, தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் ரிலீஸ் உரிமை என இப்படமானது வெளியீட்டிற்கு முன்னே, சுமார் ரூ 535 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படமானது இந்த வசூலையும் கடந்து, முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ 55 முதல் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சுதந்திர தின தொடர் விடுமுறையின் காரணமாக, மேலும் இப்படம் வார இறுதியில் சுமார் ரூ 150 முதல் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.