Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூலி படத்திற்காக லோகேஷ் அண்ணாவிற்கு நன்றி… நடிகை மோனிஷா பிளெஸ்ஸியின் நெகிழ்ச்சிப் பதிவு

Actress Monisha Blessy: இன்று உலகம் முழுவதும் கூலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கூலி படத்தில் நடித்த நடிகை மோனிஷா பிளெஸ்ஸி தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கூலி படத்திற்காக லோகேஷ் அண்ணாவிற்கு நன்றி… நடிகை மோனிஷா பிளெஸ்ஸியின் நெகிழ்ச்சிப் பதிவு
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகை மோனிஷா பிளெஸ்ஸிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Aug 2025 11:14 AM

நடிகை மோனிஷா பிளெஸ்ஸி (Monisha Blessy)  தனது சினிமா வாழ்க்கையை முதலில் தொலைக்கட்சியில் இருந்தே தொடங்கியுள்ளார். அதன்படி அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான கலக்கப் போவது யாரு, குக்கு வித் கோமாளி மற்றும் டாப்பு குக்கு டூப்புக் குக்கு என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி வெளியான மாவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகினார். நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் அவரது தங்கையாக நடிகை மோனிஷா பிளெஸ்ஸி நடித்து இருந்தார். இவர்களின் அம்மாவாக நடிகை சரிகா நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் நடிகை மோனிஷா பிளெஸ்ஸியின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்லப் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள கூலி படத்தில் நடிகை மோனிஷா பிளெஸ்ஸி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சூப்பர் ஸ்டார் உடன் திரையைப் பகிர்ந்து கொண்டது பெருமையான தருணங்களில் ஒன்று:

அதன்படி நடிகை மோனிஷா பிளெஸ்ஸி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, என் பயணத்தில் கடவுள் காட்டிய மகத்தான அருளுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து #கூலி படத்தில் இந்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அண்ணாவுக்கு மிக்க நன்றி. இது உண்மையிலேயே எனக்கு உலகத்தையே குறிக்கிறது. ரஜினிகாந்த் சார் எப்போதும் சொல்வது போல், அற்புதங்கள் நடக்கின்றன… எனக்கு, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு அதிசயம்தான். பல சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது நான் என்றென்றும் போற்றும் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… கூலி படத்திலிருந்து ஐயம் தி டேஞ்சர் பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ

மோனிஷா பிளெஸ்ஸி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?