Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?
Rajinikanth's Coolie News: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ளது கூலி படம். இந்தப் படத்தை அதிகாலை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Supestar Rajinikanth) நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) எழுதி இயக்கிய இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்களிடையே தொடர்ந்து எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பான் இந்திய மொழிகளின் சூப்பர் ஸ்டார்களான நாகர்ஜுனா, அமீர் கான், உபேந்திரா ராவ் மற்றும் சௌபின் ஷாகிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெஸி, ரிஷிகாந்த், சார்லி மற்றும் பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு கேமியோ செய்துள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த நிலையி இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியான கூலி படத்தைப் பார்த்த மக்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#Coolie – 4.5 ⭐⭐⭐⭐
lokesh kanagaraj and team delivered a blockbuster.🔥
1st Half – Good mix of Mass & Loki’s plot twists🔥
One of the best de-aging in Kollywood 🔥
The mass scenes in the second half worked out big time.😭@rajinikanth sir sambavam🔥#CoolieReview pic.twitter.com/3G4Gne7fjW
— Swetha™ (@SwethaLittle_) August 14, 2025
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழு ஒரு சிறப்பான ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளனர். கூலி படஹ்ட்தின் முதல் பாதி மாஸாக உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜின் ட்விட்ஸ் படத்தில் சிறப்பாக வேலை செய்துள்ளது. மேலும் கோலிவுட் சினிமாவில் சிறந்த டி ஏஜிங் செய்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#Coolie
– Honestly, the hype was the only good thing. After watching, it felt like all the energy drained away — weak storyline, messy execution, and nothing close to the expectations. A total letdown👎🏻.#CoolieReview #Rajinikanth pic.twitter.com/MmUAzcoJmb— ج (@Cinepollss) August 14, 2025
உண்மையை சொல்லவேண்டும் என்றால் படத்தின் எதிர்பார்ப்பை மட்டுமே படக்குழு அதிகரித்தது. ஆனால் படம் பார்த்தப்பிறகு அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. மிகவும் மோசமான ஸ்டோரி லைன். அதனை காட்சிப்படுத்திய விதமும் ஏமாற்றத்தை கொடுத்தது. முழுக்க முழுக்க ஏமாற்றமே கூலி படம்.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
Intermission
Trailer time decoder chair story is right.
Trailer matum illa 1st half kooda underplayed mari than iruku😬🧐
Morattu Elevation for Flashback portion
Everything depends on Powerhouse 🔥💥💥 flashback portion #CoolieFDFS #Coolie #CoolieReview #50YearsofRajinikanth pic.twitter.com/Htep545INI— Ganesh Kumar (@ganeshkumar_95) August 14, 2025
கூலி படத்தின் ட்ரெய்லர் மட்டும் ஸ்லோவாக இல்லை. படத்தின் முதல் பாதியும் ஸ்லோவாகதான் உள்ளது. மேலும் ஃப்ளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருந்தது. படத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் பவர் ஹவுஸ் பாடலை நம்பியே உள்ளது.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#cooliereview : DISAPPOINTED 👎🏻
2/5 ⭐⭐
First Half – Slow pacing, weak comedy, and predictable scenes fail to grab attention.
Second Half – Turns even messier with forced drama, over-the-top action, and a dragged climax that tests patience.#Rajinikanth #Coolie pic.twitter.com/NUBtFeGrVO
— ج (@Cinepollss) August 13, 2025
கூலி படத்தின் முதல் பாதி மிகவும் ஸ்லோவாக உள்ளது. காமெடி படத்தில் எடுபடவில்லை. அடுத்தடுத்த காட்சிகள் கணிக்கக்கூடிய வகையிலேயே உள்ளது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது. மக்களின் பொறுமையை சோதிக்கும் படமாக கூலி உள்ளது.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#Coolie #CoolieReview By far the worst movie in #LokeshKanagaraj career . Crowd went complete silent mode . No high moments as it’s flat entire . Disappointed
— Ab.Reddy (@AbhiMarri534) August 14, 2025
கூலி ப்டம் லோகேஷ் கனகராஜின் சினிமா வாழ்க்கையில் மிகவும் மோசமான படம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு உற்சாகமே இல்லை. முழுக்க முழுக்க ஏமாற்றத்தை ஏற்படுத்திய படம் கூலி.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#CoolieReview :-#Rajinikanth One Man Show, #Nagarjuna Antagonist As Simon Gives Pure Goosebumps, #AamirKhan In A Powerful Cameo, Anirudh Bgm With Action Is Next Level, Kollywood 1st 1000Cr Movie #LokeshKanagaraj Best Direction
Negative :- Nil👎
Ratings:- 4/5#Coolie #CoolieFDFS pic.twitter.com/STXnLu8umJ— UDay✘ (@PROUDAYZ) August 13, 2025
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒன்மேன் ஷோவாக இருக்கிறார். நாகர்ஜுனாவின் வில்லத்தனம் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அமீர்கானின் கேமியோ மாஸாக உள்ளது. மேலும் அனிருத்தின் பிஜிஎம் ஆக்ஷன் காட்சிகளுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது. கோலிவுட் சினிமாவில் 1000 கோடிகளை வசூலிக்கும் படமாக இது இருக்கும் என்பது உறுதி.
கூலி படம் குறித்த எக்ஸ் தள விமர்சனம்:
#Coolie – What an Excellent intro of superstar #Rajinikanth with Verithanamana elevation 🥵🔥
LokeshKanagaraj & Anirudh Sambavam😍 #CoolieReview | #CoolieBlockbuster | #Coolie pic.twitter.com/eIXd40JJk1
— Mɪᴛᴛᴀɪ Mᴀʀலி 🌴 (@This_is_Thirai) August 14, 2025
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூலி படத்தில் சிறப்பான இண்ட்ரே உள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் சம்பவம் வேறலெவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.