கூலி ரிலீஸாகும் தியேட்டரில் ரசிகர்களுக்கு மதராஸி படக்குழு வைத்துள்ள சர்ப்ரைஸ்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் பிசியாக நடித்து வந்தார். அமரன் படத்தின் பணிகளில் இருக்கும் போதே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணியை அறிவித்தார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் சிக்கர்ந்தர் படத்தில் பிசியாக இருந்தார். அந்தப் படத்தின் ரிலீஸிற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் சலம்பல என்ற முதல் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு முன்னதாக வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்து இருந்தது. மேலும் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மதராஸி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்:
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவகியுள்ள மதராஸி படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மதராஸி படத்தின் போஸ்டரையும் பதிவுட்டுள்ளனர்.
அந்தப் பதிவில் அவர்கள் கூறியுள்ளதாவது, நீங்க தலைவர் தரிசனத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு செல்கிறீர்களா? அப்போ உங்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு. கூலி படத்துடன் இணைந்து மதராஸி படத்தின் எக்ஸ்டண்டட் க்ளிம்ஸ் வீடியோவையும் பாருங்கள் என்று அந்தப் பதிவில் படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Going for Thalaivar Dharisanam to theatres? 😍
It’s a double treat 💥
Catch the #Madharaasi extended glimpse playing exclusively on the big screens, along with #Coolie ❤🔥#MadharaasiFromSep5 pic.twitter.com/dAdtiIMqCH
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 13, 2025
Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?