ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் ‘மாரீசன்’ படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!
Director Shankar About Maareesan Movie : இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் மாரீசன். இந்த படத்தில் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்திருந்தனர். பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை, இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் ஷங்கர் (S. Shankar). இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஹை பட்ஜெட் திரைப்படங்களை இயக்குபவர் என்றால், நமது நினைவிற்கு முதலில் வருவது இயக்குநர் ஷங்கர் தான். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் கேம் சேஞ்சர் (Game changer). நடிகர் ராம் சரண் (Ram Charan)மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இணைந்து இப்படத்தில் நசடித்திருந்தனர். கடந்த 2025, ஜனவரி மாதத்தில் இப்படம் வெளியானது. இப்படமானது முற்றிலும் அரசியல் கலந்த கதைக்களத்துடன் வெளியகியிருந்தது. தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கர், கமலின் இந்தியன் 3 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் ஃபகத் பாசில் (Fahadh Faasil) மற்றும் வடிவேலு (Vadivelu) இணைந்து நடித்திருந்த, மாரீசன் (Maareesan) திரைப்படத்தை பாராட்டி மற்றும் அந்த படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார். இது குறித்து இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!
மாரீசன் படம் குறித்து இயக்குநர் சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Just watched #Maareesan –
A story building first half followed by an unexpected and superb second half! 💥#Vadivelu’s guileless appearance on screen and the sinister contrast in character gives immense depth and strength to the film. The scene where he breaks down…Wow, what a…— Shankar Shanmugham (@shankarshanmugh) August 10, 2025
இந்த எக்ஸ் பதிவில் இயக்குநர் ஷங்கர், ” மாரீசன் படத்தை தற்போதுதான் பார்த்தேன். முதல் பாதி படமானது கதையை மையமாக கொண்ட படம், அதுபோல் இரண்டாம் பாதி எதிர்பாராத திருப்பங்கள் என சுவாரஸ்யமாக இருந்தது. படத்தில் வடிவேலுவின் தோற்றமும், அவரின் கதாபாத்திரத்தில் இருக்கும் வேறுபாடுகளும், படத்தின் ஆழத்தையும், வலிமையையும் காட்டுகிறது. அவர் உடைந்துபோகும் காட்சிகளை பார்க்க, ஆஹா என்ன ஒரு சிறந்த நடிகர் என தோன்றுகிறது.
மேலும் நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பும் பாராட்டத்தக்கது. இப்படத்தின் நேர்த்தியான கதையமைப்பிற்கு இயக்குனருக்கும், எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள். மேலும் பல ஆண்டுகளாக சிறந்த ஸ்கிரிப்டுளை தேர்நதெடுத்ததற்காக, தயாரிப்பாளர் ஆர். பி சௌவுத்ரிக்கும் தனது பாராட்டுகளை” இயக்குநர் எஸ். சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
மாரீசன் திரைப்படம் :
மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் மாரீசன். இதில் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது எதிர்பாராத பாசிடிவ் விமர்சனங்களையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.