சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Madharaasi Movie Making Video: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் மதராஸி படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயனின் 22-வது படமான அதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi) நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகளில் சிவகார்த்திகேயன் இருக்கும் போதே தனது 23-வது படத்திற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்தது குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் உடனான இந்த கூட்டணி அறிவித்ததில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
படத்தின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. இதற்கு இடையில் இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ் இந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தின் இடைவெளியில் சிவகார்த்திகேயனின் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு சிக்கந்தர் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் திரையரங்குகளில் வெளியான பிறகு முழு நேரமாக சிவகார்த்திகேயனின் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து படத்திற்கு மதராஸி என்று பெயர் வைத்தது படக்குழு இதனை அறிவித்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.




இணையத்தில் வைரலாகும் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோ:
மேலும் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் பிண்ணனி இசை அமைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என்பது படத்தின் மேக்கிங் வீடியோவைப் பார்க்கும் போதே தெரிகிறது.
Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Just 25 days left… This is the final run, and we’re not backing down 🔥
A special sneak peek into the racy mood of #Madharaasi 💥
▶️ https://t.co/jeiUb0UQWQ#DilMadharaasi#MadharaasiFromSep5@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial @VidyutJammwal… pic.twitter.com/xOB9cpE2qi
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 11, 2025
Also Read… அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்