Madharaasi: மதராஸி படத்தின் கதை இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!
Madharaasi Movie Plot Leaked : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம் மதராஸி. தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா வரை பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), இணைந்திருக்கும் திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த திரைப்படமானது கடந்த 2023ம் ஆண்டு SK23 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகப் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதராஸி படத்தின் கதைக்களம் பற்றிய தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க : சிலம்பரசன் பட ஷூட்டிங் எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!
மதராஸி திரைப்படத்தின் கதைக்களம் இதுவா :
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் கதைக்களமானது, “தமிழகத்தில் உள்ள ஒரு சிறப்பு அணியினருக்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் இடையே நடக்கும் அதிரடி ஆக்ஷ்ன் படமாகவும். மேலும் இப்படமானது காதல், பழிவாங்கல், தியாகம் மற்றும் நட்பு போன்ற கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது SYNOPSIS என்ற இணைய தளத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : விஜய்யிடம் 2 படத்திற்கு கதை கூறிவிட்டேன் – லோகேஷ் கனகராஜ்
மதராஸி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த பதிவு :
Enjoy the SALAMBALA VIBE 🔥
This will be massive on the big screens 💥#Madharaasi first single #Salambala 🤙🏻 out now ❤🔥An @anirudhofficial banger 🥁
Sung by @SaiAbhyankkar
Lyrics by #SuperSubu #DilMadharaasi#MadharaasiFromSep5… pic.twitter.com/m2uLk7I1EX— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 31, 2025
இந்த மதராஸி திரைப்படமானது, கஜினி மற்றும் துப்பாக்கி போன்ற படங்களின் கதைக்களத்தைப் போல உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் விக்ராந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அமரன் படத்திற்குப் பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியிருக்கும் பான் இந்தியப் படமாக இந்த மதராஸி அமைந்துள்ளது. இந்த படம் வெளியிட்டிருக்கும் இன்னும் சில வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.