சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வாட்டர்மெலான் காட்சி.. – ஏ.ஆர். முருகதாஸ் கருத்து!
AR Murugadoss React To Suriyas Karuppu Movie Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் சூர்யா வரை பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான சூர்யாவின் கருப்பு படத்தின் டீசரில், கஜினி திரைப்படத்தின் வாட்டர்மெலான் காட்சி இடம் பெற்றிருந்தது. அது குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss), தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சிக்கந்தர் (Sikandar). நடிகர் சல்மான்கானின் (Salman Khan) முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியானது. இந்தி மொழியில் வெளியான இப்படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை அடுத்து, இவர் தமிழில் மதராஸி (Madharaasi) என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஏ. ஆர். முருகதாஸ். அதில் அவரிடம், சூர்யாவின் (Suriya) கருப்பு (Karuppu) திரைப்படத்தின் டீசர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். முருகதாஸ். “கஜினி படத்தில் உள்ள தர்பூசணி சாப்பிடும் காட்சியை, கருப்பு டீசரில் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்? வைரலாகும் தகவல்!
சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் டீசர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கருத்து
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், “கஜினி திரைப்படத்தில் தர்பூசணி சாப்பிடும் காட்சியை, கருப்பு படத்தின் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். இந்த காட்சியைப் பார்வையாளர்கள் மீண்டும் பெரிய திரையில் பார்த்து ரசிப்பார்கள். அந்த காட்சியானது தற்போது பிரபலமாகி வருகிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. கஜினி திரைப்படத்தில் அந்த காட்சியை சாதாரணமாக தான் வைத்தேன். ஆனால் அந்த காட்சிக்கு, இத்தனை வருடத்திற்கு பிறகும் இவ்வளவு அன்பு கிடைப்பதில் நான், மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : கோவில் திருவிழாவில் கும்மி டான்ஸ் ஆடி அசத்திய சூரி – இணையத்தில் கவனம் பெறும் வீடியோ!
சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் பதிவு
On this special day of celebrating @Suriya_offl sir, we’re thrilled to present the powerful teaser of #Karuppu💥#KaruppuTeaser https://t.co/mt3OVur82s #HappyBirthdaySuriya #கருப்பு #కరుప్పు #കറുപ്പ് #ಕರುಪ್ಪು pic.twitter.com/jIgDqSQLWp
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 23, 2025
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூர்யாவின் 45வது படம் கருப்பு. இப்படத்தில் சூர்யா முன்னணி வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் கடந்த 2025, ஜூலை 23ம் தேதியில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. மேலும் இப்படம் இந்த 2025 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.