Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bhavani Sre: சூர்யாவின் 46வது படத்தில் இணையும் விடுதலை பட நடிகை? வைரலாகும் தகவல்!

Suriya46 Movie Update : தமிழ் சினிமாவை அடுத்தாக, தற்போது தெலுங்கு சினிமாவில் சூர்யா நடித்துவரும் படம் சூர்யா46. இந்த படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிவருகிறார். இந்நிலையில், இப்படத்தில் விடுதலை திரைப்பட பிரபல நடிகை பவானி ஸ்ரீ இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Bhavani Sre: சூர்யாவின் 46வது படத்தில் இணையும் விடுதலை பட நடிகை? வைரலாகும் தகவல்!
பவனி ஸ்ரீ மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2025 23:00 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது. சூர்யாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்து. பல ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி, சுமார் ரூ.232 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் (RJ balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu)திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா, தெலுங்கு பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில், சூர்யா46 (Suriya46) படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baju) நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ (Bhavani sre) இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!

சூர்யா46 திரைப்படத்தின் நியூ போஸ்டர் பதிவு :

சூர்யாவின் 46வது திரைப்படமாக இந்த சூர்யா46 படமானது உருவாகிவருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, இந்த படத்தை சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை அடுத்தாக, இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் நடைபெற்றிருந்தது. அதை அடுத்ததாக 2025 ஜூன் ஆரம்பத்தில் இப்படத்தின் ஹூட்டிங்கும் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

சூர்யா46 படத்தின் டைட்டில் இதுவா ?

இந்த படத்தில் நடிகர் சூர்யா, அறிவியல் அறிஞராக நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. அறிவியல், காதல் மற்றும் மாறுபட்ட ஆக்ஷன் படமாக இந்த சூர்யா46 படமானது உருவாகவுள்ளதாம். இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்குப் படக்குழு “விஸ்வநாதன் அண்ட் சைன்ஸ்” என தலைப்பை வைக்கவிருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்களில் கூறுகின்றன.