Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : சூர்யா சாருடன் பணியாற்ற விருப்பும்.. ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj And Suriya collaboration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், சூர்யாவுடன் படத்தில் இணைய விரும்புவதாக ஓபனாக பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj : சூர்யா சாருடன் பணியாற்ற விருப்பும்.. ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாImage Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jul 2025 15:53 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் விஜய் (Vijay) வரை பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த கூலி திரைப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு, படத்தின் புரோமோஷன் பணிகளும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படக்குழு புரோமோஷன் பணிகளுக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனியார் கல்லூரி ஒன்றிற்கு ப்ரோமோஷனுக்காக சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அவர், சூர்யா (Suriya) சாருடன் பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சூர்யா அண்ணாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் – விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சிப் பேச்சு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சூர்யா குறித்துப் பேசியது :

அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ், “நான் கடந்த 2003 முதல் 2005 வரை கல்லூரி படித்தபோது, நான் அதிகம் பார்த்த படங்கள் சூர்யா சாரின் திரைப்படங்களைத்தான். அவரின் ஆயுத எழுத்து, பிதாமகன், காக்க காக்க மற்றும் மாயாவி போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். நானும் சூர்யா சாருடன் பணிபுரியவேண்டும் என விரும்புகிறேன். இருவருக்கும் சரியான நேரம் அமைந்தால், நிச்சயமாக சூர்யா சாரை வைத்துப் படத்தை இயக்குவேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூரியிருந்தார்.

இதையும் படிங்க : தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது… ஆனால் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு :

லோகேஷ் கனகராஜ் – சூர்யா கூட்டணி :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கேமியோவில் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தை அடுத்ததாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் ஒரு படமாக இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் அமையவிருக்கும் இந்த ரோலக்ஸ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.