சூர்யா அண்ணாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் – விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சிப் பேச்சு!
Actor Vijay Devarakonda: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்தாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கிங்டம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உள்ள இந்தப்படத்தில் புரமோஷன் பணிகளில் நடிகர் விஜய் தேவரகொண்டா பிசியாக வலம் வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). தெலுங்கு சினிமாவில் தனது கடின உழைப்பால் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது இந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். இறுதியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் தி ஃபேமிலி ஸ்டார். குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க கமிட்டான படம் கிங்டம். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னுரி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக நடிகர் நானியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெர்சி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் படம் வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.




நடிகர் சூர்யாவிற்கு மனம் நெகிழ நன்றி சொன்ன விஜய் தேவரகொண்டா:
இந்த நிலையில் சமீபத்தில் கிங்டம் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து பேசினார். அதில் தமிழ் மொழியில் உருவாகியுள்ள கிங்டம் படத்தின் டீசருக்கு சூர்யாவின் குரல் வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கௌதம் தின்னுரி விரும்பியதாகவும் அவரிடம் பேசவும் சொன்னதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் சூர்யாவிடம் உதவி கேட்டு அவரை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இயக்குநரின் வற்புறுத்தலால் சூர்யா அண்ணாவில் கால் பண்ணினேன். அவரிடம் நான் ஒரு உதவி கேட்பேன் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்றும் கூறினேன்.
Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்னை – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
அதற்கு சூர்யா அண்ணா என்ன என்ன வேண்டும் சொல்லு என்றார். நான் விசயத்தை சொன்னவுடனே அவர் நான் நிச்சமாக முடியாது என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக செய்வேன் என்று கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு குரல் கொடுத்தது மட்டும் இன்றி அதனை வெளியிடவும் செய்தார். அவருக்கு நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றும் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் விஜய் தேவரகொண்டாவின் பேச்சு:
“I’ve to thank #Suriya Anna, as he released & dubbed for #Kingdom teaser🎙️. My director wanted Suriya Anna voice, but i don’t like asking favours🫰. Unwillingly asked Suriya Anna & asked to say ‘No’, but he said that he’ll do for me♥️”
– #VijayDevarakondapic.twitter.com/n0qM4elfq7— AmuthaBharathi (@CinemaWithAB) July 29, 2025