Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குநர்!

Kingdom Movie First Review: நடிகர் விஜய் தேவரகொண்ட நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கிங்டம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த பிரபல இயக்குநர்!
விஜய் தேவரகொண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2025 13:30 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). இவர் தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வந்தாலும் பான் இந்தியா அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லாம். தெலுங்கு சினிமாவில் இவர் நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் படம் கிங்டம். இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாக படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இறுதி செய்துள்ளது. அதன்படி படம் வெளியாக் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு நேற்று 26-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது.

முழுக்க முழுக்க வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இவரது நடிப்பு ட்ரெய்லரிலேயே தெரிக்கவிடுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் தியேட்டரில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கிங்டம் படத்திற்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கொடுத்த விமர்சனம்:

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேசியது தற்போது இணையத்தில் அதிகமாக ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேசுகையில், நான் கிங்டம் படத்தில் ஒரு 45 நிமிடக் காட்சிகளைப் பார்த்தேன்.

கிங்டம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் படத்தின் திரைக்கதை மிகவும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக அந்த ஜெயில் காட்சிகளை பார்க்கும் போது பிரிமித்துவிட்டேன். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருதின் இசை வேறமாதிரி உள்ளது. படம் மிகச் சிறப்பாக உள்ளது. தியேட்டரில் இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also Read… Fahadh Faasil : ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்து விட்டால்.. என் பிளான் இதுதான் – ஃபகத் பாசில்!

இணையத்தில் கவனம் பெறும் சந்தீப் ரெட்டி வங்காவின் பேச்சு:

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்தப் படம்:

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து திரையரங்குகளில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படம் தெலுங்கு மொழியில் வெளியாகி இருந்தாலும் பான் இந்தியா அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை தமிழில் நடிகர் துருவ் விக்ரமும் இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் ரீமேக்கில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகே நடிகர் விஜய் தேவரகொண்டா பான் இந்திய ஸ்டாராகா மாறினார் என்று கூறினால் மிகையாகாது.

Also Read… Lokesh Kanagaraj : இரும்பு கை மாயாவி படத்திற்காக சூர்யாவை நிராகரித்தேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!