Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vadivelu : மாரீசன் படமானது சமூக விழிப்புணர்வு படம்.. நடிகர் வடிவேலு பேச்சு!

Vadivelu About Maareesan Movie : இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான திரைப்படம் மாரீசன். இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வடிவேலு, மாரீசன் படமானது சமூக விழிப்புணர்வு திரைப்படம் என்று கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Vadivelu  : மாரீசன் படமானது சமூக விழிப்புணர்வு படம்.. நடிகர் வடிவேலு பேச்சு!
மாரீசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jul 2025 21:28 PM

மாமன்னன் திரைப்படத்தை அடுத்தாக, வடிவேலு (Vadivelu) மற்றும் ஃபகத் பாசில் (Fahadh Faasil) இணைந்து நடித்திருந்த படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சூப்பர் குட் மூவிஸ் மற்றும் ஏ.பி. இன்டெர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படமானது இன்று 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வடிவேலு, மாரீசன் திரைப்படம் குறித்தும், நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து மீண்டும் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கூலி படத்தில இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!

மாரீசன் திரைப்படம் குறித்து நடிகர் வடிவேலு பேசிய விஷயம் :

சமீபத்தில் நடிகர் வடிவேலு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர், “இந்த மாரீசன் என்ற பெயரே எனக்கு மிகவும் வித்யாசமாக இருந்தது. இப்படத்தின் இயக்குநரிடம், கதைக்கும் , இப்படத்தின் தலைப்பிற்குமான காரணம் என்ன எனக் கேட்டேன். அதற்கு அவர், “இராமாயணத்திற்கு, இப்படத்தின் கதைக்கும் தொடர்பைப் பற்றி கூறியது நன்றாக இருந்தது. மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் , நடிகர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

இதையும் படிங்க : ஜேசன் சஞ்சய் பிறந்தநாள்.. சந்தீப் கிஷன் வெளியிட்ட பதிவு!

மேலும் அவர் என்னுடைய ரசிகர் என்பதால் எனக்குக் கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. இந்த மாரீசன் படமானது சமூக விழிப்புணர்வு பற்றிப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான திரைப்படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசன் படத்தை ஏற்றுக்கொள்வார்கள்” என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

மாரீசன் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் :

இந்த மாரீசன் திரைப்படமானது இன்று 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் பாசிலுடன் , நடிகை கோவை சரளாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எமோஷனல், மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.