Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jason Sanjay: ஜேசன் சஞ்சய் பிறந்தநாள்.. சந்தீப் கிஷன் வெளியிட்ட பதிவு!

Jason Sanjay Birthday : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சந்தீப் கிஷன். இவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூலை 25ம் தேதியில், தளபதி விஜய்யின் மகனும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய்க்குப் பிறந்தநாள். இதற்கு நடிகர் சந்தீப் கிசான் வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jason Sanjay: ஜேசன் சஞ்சய் பிறந்தநாள்.. சந்தீப் கிஷன் வெளியிட்ட பதிவு!
ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jul 2025 16:11 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் ஜேசன் சஞ்சய் (Jason sanjay). முன்னணி நடிகர்களில் மகன்கள் மற்றும் இயக்குநர்களில் மகன்கள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கட்டி வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் JS01xSK31. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடித்து வருகிறார். இவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் ராயன். நடிகர் தனுஷின் (Dhanush) இயக்கத்திலும், நடிப்பிலும் கடந்த 2024ம் ஆண்டு இப்படமானது வெளியானது. இந்த படத்தில் தனுஷின் சகோதரன் கதாபாத்திரத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்திருந்தார்.

அதை அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் JS01xSK31 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இன்று 2025, ஜூலை 25ம் தேதியில் ஜேசன் சஞ்சயின் 25வது பிறந்தநாள். இந்நிலையில், ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்… டியூட் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

நடிகர் சந்தீப் கிஷன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

சந்தீப் கிஷன் மற்றும் ஜேசன் சஞ்சயின் திரைப்படம் :

ஜேசன் சஞ்சய் இந்த புதிய படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் முன்னணி நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாகத் தெலுங்கு நடிகை ஒருவர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம்.

இதையும் படிங்க : சூர்யாவின் ‘கருப்பு’ படம்… ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

இந்த புதிய படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 1 வருட காலமாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அநேகமாக இப்படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.