Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்… டியூட் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் பிரதீப் ரங்கனாதன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது போல இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி ரிலீஸ் கன்ஃபார்ம்… டியூட் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
டியூட் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2025 15:20 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் என இரண்டு படங்களின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Company) படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். மேலும் டியூட் (Dude Movie) படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் இன்று நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களின் குழு அவருக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றது. அந்த வரிசையில் டியூட் படமும் அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

அதன்படி அந்தப் போஸ்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தது மட்டும் இன்றி படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. இது தற்போது பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… நெட்ஃபிளிக்ஸில் மிஸ்பன்னாமல் பார்க்க வேண்டிய க்ரைம் திரில்லர் படம் டிடெக்டிவ் உஜ்வலன்!

டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

முன்னதாக பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

அதன்படி நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகம் ஆனது கோமாளி படத்தில் தான். இதில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக அறிமுகம் ஆன படம் லவ் டுடே.

இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025-ம் ஆண்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் ட்ராகன். இந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… கைதி 2 படத்தில் புது கதாப்பாத்திரங்கள் இருக்கு – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்