ஸ்டைலிஷான லுக்கில் நடிகர் சூர்யா… புதிய போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 டீம்!
Suriya 46 Movie: நடிகர் சூர்யா தற்போது கருப்பு மற்றும் சூர்யா 46 என்று அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இன்று சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இரண்டு படங்களில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணியின் போதே அடுத்ததாக இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா. இந்தப் படத்திற்கு தற்போது கருப்பு என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் டீசரும் இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கருப்பு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri) இயக்கத்தில் நடிக்க உள்ளதை அறிவித்தார். இவர் தமிழில் முன்னதாக நடிகர் தனுஷை வைத்து வாத்தி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இறுதியாக இயக்கிய படம் லக்கி பாஸ்கர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்த்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து சூர்யா ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார்.




எப்போதும் இளமையாக இருக்கும் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்:
இந்த நிலையில் இன்று ஜூலை மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யா தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது சூர்யா 46 படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில், ஒருபோதும் வயதாகாத, என்றும் இளமையாக இருக்கும் ஒரே ஒருவருக்கு, எங்கள் அன்பான சூர்யா சாருக்கு ஒரு அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் ஆர்வமும் இருப்பும் ஒவ்வொரு பிரேமையும் ஒளிரச் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
Also Read… நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சூர்யா 46 படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Wishing the one and only, never-aging and forever young, Our dearest @Suriya_offl garu a fantastic birthday! 🤩 – Team #Suriya46
Your passion and presence light up every frame. 🌟#HBDSuriyaSivakumar #HappyBirthdaySuriya #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena… pic.twitter.com/l2mcm1RuZW
— Sithara Entertainments (@SitharaEnts) July 23, 2025
Also Read… மேரா பாய் இது நம்ம டைம்… அதிரடியான காட்சிகளுடன் வெளியானது கருப்பு படத்தின் டீசர்!