Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்குமா ரஜினிகாந்த்தின் கூலி? சன் பிக்சர்ஸ் சூப்பர் திட்டம்!

Coolie Release Update: நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்திய அளவில் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்குமா ரஜினிகாந்த்தின் கூலி? சன் பிக்சர்ஸ் சூப்பர் திட்டம்!
ரஜினிகாந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Jul 2025 18:32 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி (Coolie) திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்தப் படத்தில் தெலுங்கில் இருந்து நாகார்ஜூனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் பபடத்தில் அனிருத் இசையில் சிக்கிடு வைப், மோனிகா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் கூலி படத்தை இந்திய அளவில் 5000 திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்கும் கூலி?

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் கூலி படத்தை இந்திய அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை 5000 திரையரங்குகளில் வெளியானால் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே நாள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கூலி படத்துக்கு 5000 திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இதையும் படிக்க: இந்தியன் 3 படத்திற்கு சம்பளம் இல்லாமல் முடித்துக்கொடுக்கும் கமல் மற்றும் ஷங்கர்… ரிலீஸிற்கு தயாராகும் படக்குழு!

கூலி படத்தின் 3வது பாடல்

அனிருத் இசையில் இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் 3வது பாடலான பவர் ஹவுஸ் பாடல் ஜூலை 22, 2025 அன்று இரவு 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

பவர் ஹவுஸ் பாடல் ப்ரமோ வீடியோ

இதையும் படிக்க : சூப்பர் ஹிட்டான மோனிகா பாடல்.. சாண்டி மாஸ்டர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

மோனிகா பாடலில் நடிகர் சௌபின் சாஹிரின் நடனம் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக இருந்தது. அவர் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மிகச்சிறப்பாக நடனமாடியிருந்தார். அவரது நடனம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருந்தது.