Coolie OTT : ரஜினிகாந்தின் கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. குஷியில் ரசிகர்கள்!
Coolie OTT Release Update : நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் 8 வாரங்களுக்கு பிறகு தன், ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (lokesh Kanagaraj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்தின் (Rajinikanth) 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு பின் மற்ற படங்களைப் போல 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகாமல், ரிலீசிற்கு பிறகு சுமார் 8 வாரங்களுக்குப் பின்தான் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவின் படி, கூலி படமானது சுமார் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) நிறுவனம் உரிமையைப் பெற்றிருக்கும் நிலையில், ரிலீசை தொடர்ந்து 8 வாரங்களுக்கு பிறகுதான், ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பிங்வில்லா செய்தி தளத்தில் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : லண்டனில் நடக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?
கூலி படத்தின் 3வது பாடல் அறிவிப்பு பதிவு :
Brace yourselves!🔥 The #Coolie third single #PowerHouse – Song launch event is happening at Quake Arena, Hyderabad on July 22 at 9:30 PM! 💥😎#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @shrutihaasan @Arivubeing… pic.twitter.com/vfV9Do5FWm
— Sun Pictures (@sunpictures) July 17, 2025
கூலி திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிவு :
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படத்தில் அவருடன், நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், அமீர்கான், ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார். மோனிகா என்ற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற வருகிறது.
இதையும் படிங்க : ‘மாரீசன்’ படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமை.. இத்தனை கோடிகளுக்கு விற்பனையா?
இந்தப் பாடலை அடுத்ததாக இப்படத்தின் கதையைப் பற்றி இணையத்தில் கசிந்துள்ளது. இப்படமானது ஒரு பழைய தங்க வாட்சை வைத்துத்தான் நகர்வதாகக் கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா எப்போது :
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி இசை வெளியீட்டை விழா வரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் அதைப்பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லரும் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகவும் ந இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்திருந்தார்.