Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madharaasi : லண்டனில் நடக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?

Madhraasi Movie Audio Launch Update : இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்துவதற்கு படக்குழு திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் விரிவாக பார்க்கலாம்.

Madharaasi : லண்டனில் நடக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jul 2025 15:01 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமானது ஆரம்பத்தில் எஸ்கே 23 திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படமானது கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தது. மேலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தியிலும் சிக்கந்தர் (Sikandar) என்ற படத்தை இயங்கிவந்த நிலையில், இப்படத்தை அடுத்ததுதான் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கிவந்தார். இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 05ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டை லண்டனில் (London) நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் முதல் பாடலும் எப்போது வெளியாகும் என்பதைப் பற்றியும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க : எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மதராஸி படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு பதிவு :

சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருப்பது மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் கதாநாயகியான நடித்திருந்தார். மேலும் இரண்டாவதாக மதராஸி படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ஸ்ரீ லட்சமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலை படக்குழு விரைவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

இதையும் படிங்க : அனுஷ்காவின் ‘காதி’ படத்துடன் மோதும் ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ?

மதராஸி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது :

மதராஸி படத்தின் முதல் பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலிருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் 2025 ஜூலை 23ம் தேதி அல்லது 24ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் வெளியாகவும் எனப் படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, SK24, SK26 போன்ற படங்களில் நடிக்கவுள்ளார். மேலும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.