Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் மீது ஏன் இவ்வளவு வன்மம்.. லவ் மேரேஜ் பட இயக்குநர் வருத்தம்!

Director Shanmuga Priyan About Sivakarthikeyan Criticism : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் பட இயக்குநர்கள் மற்றும் படங்களைப் பாராட்டி வரும் நிலையில், இவரின் மீது நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுவது குறித்து, லவ் மேரேஜ் பட இயக்குநர் சண்முக பிரியன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம் .

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் மீது ஏன் இவ்வளவு வன்மம்.. லவ் மேரேஜ் பட இயக்குநர் வருத்தம்!
சிவகார்த்திகேயன் மற்றும் சண்முக பிரியன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jul 2025 16:50 PM

சின்னதிரையில் இருந்து சினிமாவில் நுழைந்து வெற்றிபெற்ற நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை சுமார் 22 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் (Amaran) படம் வெளியானது. இந்த படமானது சுமார் ரூ. 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாகக் கிட்டத்தட்ட 2 படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்யை (Thalapathy Vijay) போல் படங்களின் இயக்குநர்கள் மற்றும் படங்களையும் பாராட்டி வருகிறார். இதன் காரணமாக இவருக்குப் பல வித நெகடிவ் விமர்சனங்கள் எழுந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் பட இயக்குநர் சண்முக பிரியன் (Shanmuga Priyan) வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், டூரிஸ்ட் பேமிலி இயக்குநருடன் கலந்துகொண்ட நிலையில், அதில் சிவகார்த்திகேயனைப் பற்றிப் பேசியுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி டைட்டிலில் மாற்றம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் மீது நெகடிவ் விமர்சனம் குறித்து இயக்குநர் சண்முக பிரியன் பேச்சு :

அந்த நேர்காணலில் இயக்குநர் சண்முக பிரியன் , ” சிவகார்த்திகேயன் சார் என்னை கூப்பிட்டு பாராட்டிய விஷயம் தவறாகப் போனது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதை நான் மிகவும் முக்கியமாக பார்க்கிறேன், ஏன் அவர் இதுபோல் பாராட்டினால் மட்டும் தவறான கருத்துக்கள் வருகிறது, இதுவே சூர்யா சார் அல்லது தனுஷ் சார் பாராட்டினால் யாரும் தவறான கருத்துக்களைத் தெரிக்கமாட்டார்கள்.

இதையும் படிங்க : சாய் தன்ஷிகாவுடன் திருமணம் தள்ளிப்போகிறதா? விஷால் கொடுத்த விளக்கம்!

அவர் எவ்வாறு வளர்ந்து வந்திருந்தார், என்பதைப் பற்றிப் படிப் படியாகப் போர்க்கும்போது. அப்போது ஒருவர் கீழ் இருந்தாலே அவர் அப்படியே அடிமட்டத்தில் இருக்கவேண்டுமா?, அவர்கள் மேலே வந்து பாராட்டுக்களைப் பெறக்கூடிய இடத்திற்கு வரக்கூடாதா என்ற கேள்விதான் எழுகிறது. சிவகார்த்திகேயன் செய்யும் விஷயமானது பலருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. கீழ் இருந்து வந்த நபர் யாரையும் பாராட்டும் இடத்திற்கு வரக்கூடாது என நினைக்கிறார்களா ?. அமரன் படம் மாதிரியே ஒரு ஹிட் படமும் கொடுத்த பிறகும், அவர் மீது எவ்வாறு இப்படி தவறான கருத்துக்கள் வருகிறது எனத் தெரியவில்லை” எனக் கூறியிருந்தார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசிய வீடியோ :

இயக்குநர் சண்முக பிரியனுடன், இந்த வீடியோவில் இயக்குநர் அபிஷன் ஜீவந்த்தும் இணைந்து பேசியிருந்தார். இந்தக் கருத்தானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.