AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஒரு ஐபிஎல் அணிக்கு இதுவரை 17 கேப்டன்கள்.. 10 அணியும் இதுவரை எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளது?

Most Captains In One IPL Team: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலா 4 கேப்டன்களை நியமித்துள்ளன. எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சென்னை அணியை வழிநடத்தியுள்ளனர். கே.எல். ராகுல், க்ருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் லக்னோ அணியை வழிநடத்தியுள்ளனர்.

IPL 2026: ஒரு ஐபிஎல் அணிக்கு இதுவரை 17 கேப்டன்கள்.. 10 அணியும் இதுவரை எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளது?
ஐபிஎல் டீம் கேப்டன்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Mar 2026 17:43 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்குகிறது. 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய கேப்டனை அறிவித்துள்ளது. பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், அணியை வழிநடத்த இஷான் கிஷன் (Ishan Kishan) நியமிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வரலாற்றில் இஷான் கிஷன் 11-வது கேப்டன் ஆவார். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் விளையாடும் 10 ஐபிஎல் அணிகளில் ஒவ்வொன்றும் எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாட் கம்மின்ஸ் டவுட்.. இஷான் கிஷனை கேப்டனாக நியமித்த SRH!

பஞ்சாப் கிங்ஸூக்கு அதிக கேப்டன்கள்

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் அதிக கேப்டன்களை நியமனம் செய்துள்ளது. அதாவது,  பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 17 கேப்டன்களை நியமித்துள்ளது. அதில் யுவராஜ் சிங், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தனே, ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் ஹஸ்ஸி, ஜார்ஜ் பெய்லி, விரேந்தர் சேவாக், டேவிட் மில்லர், முரளி விஜய், கிளென் மேக்ஸ்வெல், ரவிசந்திரன் அஸ்வின், கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், ஷிகர் தவான், சாம் கரண், ஜிதேஷ் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பஞ்சாப் அணியை வழிநடத்தியுள்ளனர்.

2வது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்:

ஐபிஎல்-லில் அதிக கேப்டன்களை நியமித்த இரண்டாவது அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகும். டெல்லி அணி வீரேந்தர் சேவாக், கௌதம் காம்பீர், தினேஷ் கார்த்திக், ஜேம்ஸ் ஹோப்ஸ், மஹேல ஜெயவர்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், ஜேபி டுமினி, ஜாகீர் கான், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் அக்சர் படேல் ஆகியோரை கேப்டனாக நியமித்துள்ளது.

3வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

குமார் சங்கக்காரா, கேமரூன் ஒயிட், ஷிகர் தவான், டேரன் சமி, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, மார்க்ரம், பாட் கம்மின்ஸ் மற்றும் இஷான் கிஷன் உட்பட 11 வீரர்களை இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியமித்துள்ளது.

4வது இடத்தில் பெங்களூரு-மும்பை:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 9 கேப்டன்களை நியமித்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரை கேப்டன்களாக நியமித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், ஷான் பொல்லாக், டுவைன் பிராவோ, ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, கீரான் பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை கேப்டன்களாக நியமித்துள்ளது.

5 மற்றும் 6வது இடத்தில் கொல்கத்தா – ராஜஸ்தான்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை சௌரவ் கங்குலி, பிரண்டன் மெக்கல்லம், கௌதம் காம்பீர், தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, அஜிங்க்யா ரஹானே உள்ளிட்ட 8 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஷேன் வார்னே, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே, சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் உள்ளிட்ட 7 வீரர்களையும் கேப்டனாக நியமித்துள்ளது.

ALSO READ: ஃபின் ஆலன் முதல் முசரபானி வரை… ஐபிஎல் 2026-ல் அறிமுகமாக வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள்!

சென்னை மற்றும் லக்னோ தலா 4 கேப்டன்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலா 4 கேப்டன்களை நியமித்துள்ளன. எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சென்னை அணியை வழிநடத்தியுள்ளனர். கே.எல். ராகுல், க்ருணால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் லக்னோ அணியை வழிநடத்தியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் கேப்டனாக இருந்துள்ளனர்.

Follow Us