AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியல்!

IPL Winners List All Seasons: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது . இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் தலா 5 பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன.

IPL 2026: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியல்!
ஐபிஎல் சாம்பியன்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 18 Mar 2026 15:55 PM IST

டி20 உலகக் கோப்பை 2026 சீசனுக்கு பிறகு, ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது . இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் தலா 5 பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன. 2008 முதல் 2025 வரையிலான வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணிகளின் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன்..? சஞ்சு சாம்சன் விளக்கம்!

2008 முதல் 2025 வரை ஐபிஎல் வென்ற அணிகளின் பட்டியல்

ஆண்டு  சாம்பியன்  ரன்னர் இடம்  வெற்றி வித்தியாசம்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை 3 விக்கெட் வித்தியாசத்தில்
2009 டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஜோகன்னஸ்பர்க் 6 ரன்கள் வித்தியாசத்தில்
2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மும்பை 22 ரன்கள் வித்தியாசத்தில்
2011 சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை 58 ரன்கள் வித்தியாசத்தில்
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
2013 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா 23 ரன்கள் வித்தியாசத்தில்
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் XI பஞ்சாப் பெங்களூரு 3 விக்கெட் வித்தியாசத்தில்
2015 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா 41 ரன்கள் வித்தியாசத்தில்
2016 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூரு 8 ரன்கள் வித்தியாசத்தில்
2017 மும்பை இந்தியன்ஸ் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில்
2018 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
2019 மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் 1 ரன் வித்தியாசத்தில்
2020 மும்பை இந்தியன்ஸ் டெல்லி தலைநகரங்கள் துபாய் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
2021 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துபாய் 27 ரன்கள் வித்தியாசத்தில்
2022 குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில்
2023 சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அகமதாபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
2024 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அகமதாபாத் 6 ரன்கள் வித்தியாசத்தில்

ALSO READ: தோனியா? ரோஹித்தா? ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார்?

கேப்டன்சி ரெக்கார்ட்:

முன்னாள் இந்திய கேப்டன்களான எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா ஐபிஎல் வரலாற்றில் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Follow Us