IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியது ஏன்..? சஞ்சு சாம்சன் விளக்கம்!
Sanju Samson: கடந்த 2013ம் ஆண்டு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். சஞ்சு சாம்சன் 2013 முதல் 2015 வரை நான்கு சீசன்களுக்கு தனது ஆரம்ப காலக்கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காகவும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, சஞ்சு சாம்சன் மீண்டும் 2018 முதல் 2025 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார்.
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்போது, வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக சஞ்சு சாம்சன் எப்படி விளையாடுவார் என்பதை காண சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக 11 சீசன்கள் விளையாடிய சஞ்சு சாம்சன், ஏன் இறுதியாக அந்த அணியை விட்டு விலகி சிஎஸ்கே அணியில் இணைந்தார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் மாற்றாக ஒரு பரிமாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அதன்படி, சஞ்சு சாம்சன் ராஜஸ்தானை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து தான் ஏன் ராஜஸ்தானை விட்டு வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் என்பதை பார்ப்போம்.
ALSO READ: கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே அணியின் பலம் என்ன?




சஞ்சு சாம்சன் என்ன சொன்னார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது காலம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். அந்த அணியை விட்டு விலகி ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், சென்னை மீது கொண்ட காதல் காரணமாக சிஎஸ்கே அணியில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் அறிமுகம்:
கடந்த 2013ம் ஆண்டு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். சஞ்சு சாம்சன் 2013 முதல் 2015 வரை நான்கு சீசன்களுக்கு தனது ஆரம்ப காலக்கட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காகவும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, சஞ்சு சாம்சன் மீண்டும் 2018 முதல் 2025 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். அதன்படி, சஞ்சு முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
தனது நீண்ட ஐபிஎல் வாழ்க்கையில், சஞ்சு சாம்சன் இதுவரை இரண்டு அணிகளுக்காக மட்டுமே விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அவரது மூன்றாவது அணியாக இருக்கும். சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ALSO READ: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?
சஞ்சு சாம்சனின் ஐபிஎல் பயணம்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணிக்காக சஞ்சு சாம்சன் இதுவரை 28 போட்டிகளில் 677 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 149 போட்டிகளில் 4,027 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் சஞ்சு ஆவார். ஒட்டுமொத்தமாக, சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 3 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 4,704 ரன்கள் எடுத்துள்ளார்.