AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: ஒலிபெருக்கிகள்.. வாணவேடிக்கைகள்..! இங்கிலாந்து வீரர்களுக்கு தொல்லை தரும் மெக்சிகோ ரசிகர்கள்!

England vs Mexico: மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 16-வது சுற்றுப் போட்டி, இந்திய நேரப்படி நாளை அதாவது ஜூலை 6 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் . எனவே, இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் உள்ளனர்.

FIFA World Cup 2026: ஒலிபெருக்கிகள்.. வாணவேடிக்கைகள்..! இங்கிலாந்து வீரர்களுக்கு தொல்லை தரும் மெக்சிகோ ரசிகர்கள்!
மெக்சிகோ ரசிகர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2026 19:45 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) ஒரு அணியின் ரசிகர்கள், களத்தில் வீரர்கள் போராடுவதை விட சமூக வலைதளங்களிலும், பார்வையாளர்கள் அரங்கிலும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்காக சண்டையிடுவார்கள். அதெநேரத்தில், தங்கள் அணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய, அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். பலர் ஏதேனும் ஒரு எதிரணிக்கு மன உளைச்சலை கொடுத்து, தங்கள் அணி வெற்றி பெற ஓடுகிறார்கள். இதேபோன்ற ஒரு காட்சி 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரிலும் காணப்பட்டது. போட்டியை நடத்தும் மெக்சிகோ, 16-வது சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மெக்சிகோ சிட்டியில் நடைபெறுவதால், மெக்சிகோ ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக ஒரு வித்தியாசமான உத்தியை வகுத்துள்ளனர். இங்கிலாந்து அணி (England Football Team) தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே  மெக்சிகோ ரசிகர்கள் இரவு முழுவதும் கூச்சலிட்டனர். ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் இங்கிலாந்து கால்பந்து வீரர்களுக்கு இடையூறு செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: கெத்து.. மீண்டும் ஜொலித்த எம்பாப்பே.. பராகுவேயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

மெக்சிகோ ரசிகர்கள் கொடுத்த மன உளைச்சல்:


மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 16-வது சுற்றுப் போட்டி, இந்திய நேரப்படி நாளை அதாவது ஜூலை 6 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் . எனவே, இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து வீரர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். போட்டியின் 90 நிமிடங்களில் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். ஆனால், மைதானத்திற்கு வெளியே மெக்சிகோ ரசிகர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி மெக்சிகோவில் உள்ள சாண்டா ஃபே ஹோட்டலில் தங்கியுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வெளியே, மெக்சிகோ ரசிகர்கள் இரவு முழுவதும் கூச்சலிட்டனர்.  அப்போது, ஆயிரக்கணக்கான மெக்சிகோ ரசிகர்கள் கூடியிருந்தனர். அங்கு, மெக்சிகோ ரசிகர்கள் மேளங்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் பட்டாசுகளை வெடித்து இங்கிலாந்து வீரர்களைத் தொந்தரவு செய்தனர்.

ALSO READ: இங்கிலாந்து வீரர்கள் வெற்றி பெற வயாகராவா..? ஏன் பயன்படுத்த அனுமதி தெரியுமா?

இங்கிலாந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

மெக்சிகன் ரசிகர்கள் தங்களைத் துன்புறுத்துவார்கள் என்பதை இங்கிலாந்து அணி முன்பே கணித்திருந்தது. அதனால்தான், இங்கிலாந்து அணி தங்கியிருந்த சரியான ஹோட்டலை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி தங்கியிருந்த இடத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து, ரகளை செய்யத் தொடங்கினர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெக்சிகோ, ஈக்வடாரை எதிர்கொண்டது. அப்போதும் கூட, ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே ஈக்வடார் வீரர்களைச் சூழ்ந்துகொண்டு துன்புறுத்தினர். தங்களுக்குப் போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றும், அது போட்டியைப் பாதித்துவிட்டது என்றும் ஈக்வடார் வீரர்கள் கூறியிருந்தனர். இப்போது மெக்சிகன் ரசிகர்கள், இங்கிலாந்து வீரர்களைச் சரியாக அதே வழியில் துன்புறுத்தியுள்ளனர். போட்டிக்கு ஒரு நாள் முன்பு வீரர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டால், அது போட்டியைப் பாதிக்கும். மேலும், மெக்சிகோ எளிதில் வெற்றி பெறும்.

Follow Us