AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: விளையாடிய 8 போட்டிகளிலும் கோல் மழை.. உள்ளங்காலில் உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

Lionel Messi World Record: 2026 உலகக் கோப்பையில் தங்கப் பூட் விருதை வெல்வதற்கான போட்டியில் மெஸ்ஸி தற்போது முன்னணியில் உள்ளார். மெஸ்ஸி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ள நிலையில், பிரான்சின் கைலியன் எம்பாப்பே 6 கோல்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். 

FIFA World Cup 2026: விளையாடிய 8 போட்டிகளிலும் கோல் மழை.. உள்ளங்காலில் உலக சாதனை படைத்த மெஸ்ஸி!
லியோனல் மெஸ்ஸி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jul 2026 19:42 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பை 2026ல் (FIFA World Cup 2026) அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்று அதாவது 2026 ஜூலை 3ம் தேதி 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணி, மிக சிறிய நாடான கேப் வெர்டே அணியை (Cabo Verde) எதிர்கொண்டது. இந்தபோட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார்.

ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் 2ம் பாதியில் கேப் வெர்டே கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. போட்டியானது கூடுதல் நேரத்திற்குச் சென்றது, அதில் இரு அணிகளும் மொத்தமாக 2 கோல்களை அடித்தன. இறுதியில், அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் ஒரு விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றது.

ALSO READ: 16 அணிகள் மட்டுமே! ஃபிஃபா உலகக் கோப்பை 2026 நாக் அவுட் அட்டவணை விவரம்!

தொடர்ச்சியாக 8 உலகக் கோப்பை போட்டிகளில் கோல்:

கேப் வெர்டே அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம், தொடர்ச்சியாக 8 உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இந்த 8 போட்டிகள் கொண்ட தொடரின் போது, ​​மெஸ்ஸி மொத்தம் 12 கோல்களை அடித்துள்ளார். மேலும், மெஸ்ஸியின் மொத்த உலகக் கோல்களின் எண்ணிக்கை தற்போது 20-ஐ எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே ஒரு உலக சாதனையாகும்.

2026 உலகக் கோப்பையில் தங்கப் பூட் விருதை வெல்வதற்கான போட்டியில் மெஸ்ஸி தற்போது முன்னணியில் உள்ளார். மெஸ்ஸி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ள நிலையில், பிரான்சின் கைலியன் எம்பாப்பே 6 கோல்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

ALSO READ: கேப் வெர்டே அதிர்ச்சி தோல்வி.. களத்திலேயே அழுத வீரர்.. ஆறுதல் கூறி கண்ணீர் வடித்த குடும்பம்!

அர்ஜென்டினாவின் அடுத்த போட்டி எப்போது..?

அர்ஜென்டினா தனது 2வது தொடர்ச்சியான உலகக் கோப்பை மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது கோப்பையை நோக்கி வலுவாக முன்னேறி வருகிறது. இத்தொடரில் இதுவரை தோல்வியடையாத அர்ஜென்டினா, வருகின்ற 2026 ஜூலை 7 அன்று நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்தை எதிர்கொள்ளும். எகிப்தை வீழ்த்தினால் அர்ஜென்டினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

Follow Us