FIFA World Cup 2026: 16 அணிகள் மட்டுமே! ஃபிஃபா உலகக் கோப்பை 2026 நாக் அவுட் அட்டவணை விவரம்!
FIFA World Cup 2026 Round of 16 Schedule: 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் விவரங்கள் பின்வருமாறு.. கனடா, மொராக்கோ, பராகுவே, பிரான்ஸ், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, எகிப்து, கொலம்பியா மற்றும் அர்ஜென்டினா. இந்த 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026ன் (FIFA World Cup 2026) விறுவிறுப்பு அதன் உச்சத்தை எட்டியுள்ளது. 32 அணிகளுக்கான நாக்-அவுட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், கடைசி 16 அணிகளுக்கான, அதாவது 16-வது சுற்றுக்கான நிலைமை தெளிவாகியுள்ளது. இத்தொடர் 48 அணிகளுடன் தொடங்கியது, இதுவரை 32 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளைப் போன்ற இத்தொடரின் விறுவிறுப்பான இந்த கட்டத்தில், ஆப்கானிஸ்தான், போர்ச்சுகல், ஸ்பெயின் (Spain) உள்ளிட்ட மொத்தம் 16 முன்னணி அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. இதில் ஏற்படும் ஒரு தோல்வி கூட, கோப்பையை நோக்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ALSO READ: 519 நிமிடங்கள்.. தகர்க்க முடியாத தடை.. சாதனை படைத்த கோல் கீப்பர் உனை சைமன்!




எந்தெந்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின?
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் விவரங்கள் பின்வருமாறு.. கனடா, மொராக்கோ, பராகுவே, பிரான்ஸ், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, எகிப்து, கொலம்பியா மற்றும் அர்ஜென்டினா. இந்த 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதன் பொருள், இந்தச் சுற்றுக்குப் பிறகு மேலும் 8 அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் என்பதாகும்.
எந்த அணிகள் எப்போது, யாருக்கு எதிராக மோதும்?
The Round of 16 is set ✔️#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) July 4, 2026
- கனடா – மொராக்கோ: 2026 ஜூலை 4, ஹூஸ்டன் ஸ்டேடியம், இரவு 10:30 மணி.
- பராகுவே – பிரான்ஸ் போட்டி: 2026 ஜூலை 5, பிலடெல்பியா மைதானம், அதிகாலை 2:30 மணி.
- பிரேசில் – நார்வே போட்டி: 2026 ஜூலை 6, நியூ ஜெர்சி ஸ்டேடியம், அதிகாலை 1:30 மணி
- மெக்சிகோ – இங்கிலாந்து போட்டி: 2026 ஜூலை 6, மெக்சிகோ நகர மைதானம், காலை 5:30 மணி
- போர்ச்சுகல் – ஸ்பெயின் போட்டி: 2026 ஜூலை 7, டாலஸ் ஸ்டேடியம், மதியம் 12:30 மணி
- அமெரிக்கா – பெல்ஜியம்: 2026 ஜூலை 7, சியாட்டில் ஸ்டேடியம், காலை 5:30 மணி
- அர்ஜென்டினா – எகிப்து போட்டி: 2026 ஜூலை 7, அட்லாண்டா ஸ்டேடியம், இரவு 9:30 மணி
- சுவிட்சர்லாந்து – கொலம்பியா: 2026 ஜூலை 8, பிசி பிளேஸ், வான்கூவர், அதிகாலை 1:30 மணி
ALSO READ: இதுதான் ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பையா? அவரது சகோதரி சொன்ன ஷாக் நியூஸ்!
16-வது சுற்றில் மாபெரும் மற்றும் விறுவிறுப்பான மோதல்
போர்ச்சுகல் vs ஸ்பெயின்: ஐரோப்பிய கால்பந்தின் இரு மாபெரும் ஜாம்பவான்களுக்கு இடையேயான இந்தப் போட்டி, ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படுகிறது.
அர்ஜென்டினா vs எகிப்து: ரசிகர்களின் கனவுப் போட்டியாகக் கருதப்படும் இந்த ஆட்டத்தில், லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, முகமது சலாஹின் போராடும் எகிப்து அணியை எதிர்கொள்கிறது.
பிரேசில் vs நார்வே: வினிசியஸ் ஜூனியர் தலைமையிலான பிரேசில் அணி, எர்லிங் ஹாலண்டின் நார்வே அணியை எதிர்கொள்ளும்.