AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: தோல்விக்கு பிறகு அப்பாவின் மரண செய்தி.. துயரத்திலும் அணிக்காக நின்ற கால்பந்து பயிற்சியாளர்..! நெகிழ்ச்சி சம்பவம்!

Congo Football Coach: 1974-க்குப் பிறகு காங்கோவை முதல் உலகக் கோப்பையில் பங்கேற்க வைத்த பயிற்சியாளர் செபாஸ்டியன் டெசாப்ரே , போர்ச்சுகல் மற்றும் கொலம்பியா போன்ற அணிகள் இடம்பெற்றிருந்த கடினமான 'ஜே' பிரிவில் அணியை சிறப்பாக விளையாட உதவி செய்தார். இதன் காரணமாக, காங்கோ அணி லீக் சுற்று ஸ்டேஜில் இருந்து 32 அணிகள் கொண்ட அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

FIFA World Cup 2026: தோல்விக்கு பிறகு அப்பாவின் மரண செய்தி.. துயரத்திலும் அணிக்காக நின்ற கால்பந்து பயிற்சியாளர்..! நெகிழ்ச்சி சம்பவம்!
காங்கோ கால்பந்து பயிற்சியாளர் செபாஸ்டியன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jul 2026 18:34 PM IST

50 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, ஃபிஃபா உலகக் கோப்பைக்கான (FIFA World Cup 2026) காங்கோவின் பயணம் காலிறுதிக்கு முந்தைய 32 அணிகள் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. ஃபிஃபா உலகக் கோப்பையில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற காங்கோவின் கனவை இங்கிலாந்து (England Football Team) தகர்த்தது. நாக்-அவுட் சுற்றில் காங்கோ, இங்கிலாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனுடன் காங்கோ பயிற்சியாளர் செபாஸ்டியன் டெசாப்ரேவின், ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் சோகமாக முடிந்தது. இந்தத் தோல்வி பயிற்சியாளர் டெசாப்ரேவை நிலைகுலையச் செய்தது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது, ​​திடீரெனத் தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட காங்கோ பயிற்சியாளர் செபாஸ்டியன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி மனதை வருட செய்தது.

ALSO READ: ஃபிஃபா வரலாற்றிலேயே கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட அதிக கோல்கள்.. சாதித்த பெல்ஜியம்!

வரலாற்று சிறப்புமிக்க தருணம்:


1974-க்குப் பிறகு காங்கோவை முதல் உலகக் கோப்பையில் பங்கேற்க வைத்த பயிற்சியாளர் செபாஸ்டியன் டெசாப்ரே , போர்ச்சுகல் மற்றும் கொலம்பியா போன்ற அணிகள் இடம்பெற்றிருந்த கடினமான ‘ஜே’ பிரிவில் அணியை சிறப்பாக விளையாட உதவி செய்தார். இதன் காரணமாக, காங்கோ அணி லீக் சுற்று ஸ்டேஜில் இருந்து 32 அணிகள் கொண்ட அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பின்னர், நாக்-அவுட் சுற்றுகளில் இங்கிலாந்துக்கு எதிராக அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. காங்கோ வீரர் பிரையன் சிபெங்காவின் 7வது நிமிட கோல் இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ALSO READ: மெஸ்ஸி ஜெர்சியுடன் உலகக் கோப்பையை கண்டுகளித்த இந்திய வீரர்.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!

இருப்பினும், 2ம் பாதியில் ஹாரி கேனின் 2 கோல்களால் இங்கிலாந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கோ பயிற்சியாளர் செபாஸ்டியன் டெசாப்ரே, பயிற்சியாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்தை அறிவிப்பதற்காக ஊடக அதிகாரி குறுக்கிட்டபோது அதிர்ச்சியடைந்தார். அந்த ஊடக அதிகாரி பிரெஞ்சு மொழியில், “நன்றி, ஆனால் பயிற்சியாளரின் தந்தை காலமானார் என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்” என்று அறிவித்தார். டெசாப்ரே இதை எப்போது அறிந்துகொண்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் 49 வயதான அந்தப் பயிற்சியாளர் ஊடக அதிகாரியின் அறிவிப்பின்போது அமைதியாக இருந்தார்.  இந்தத் துயரச் சம்பவம் இருந்தபோதிலும், காங்கோவின் குறிப்பிடத்தக்க பயணம் குறித்து பயிற்சியாளர் டெசாப்ரே பொறுமையாக பதிலளித்தார். அப்போது, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் காங்கோ அணி இவ்வளவு தூரம் வந்தது, ஏமாற்றத்தை விட பெருமையே அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

Follow Us