AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: மெஸ்ஸி ஜெர்சியுடன் உலகக் கோப்பையை கண்டுகளித்த இந்திய வீரர்.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!

Indian Cricketer in FIFA World Cup 2026: யஷஸ்வி ஜெய்ஸ்வால், நாக்-அவுட் சுற்றின் (32 பேர் கொண்ட சுற்று) ஸ்வீடன் - பிரான்ஸ் போட்டியைக் கண்டுகளித்தார். இருப்பினும், அவர் ஸ்வீடன் - பிரான்ஸ் அணிகளின் ஜெர்சியை அணியாமல் அர்ஜென்டினாவின் ஜெர்சியை அணிந்திருந்தார். இதன்மூலம், ஜெய்ஸ்வால் லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் என்பதை காட்டியது.

FIFA World Cup 2026: மெஸ்ஸி ஜெர்சியுடன் உலகக் கோப்பையை கண்டுகளித்த இந்திய வீரர்.. இணையத்தில் ட்ரெண்ட் அடிக்கும் வீடியோ!
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jul 2026 14:41 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG) டி20 தொடரிலோ அல்லது ஒருநாள் போட்டி அணியிலோ இடம்பெறவில்லை. இருப்பினும், விராட் கோலியின் காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தற்போது, ​​யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் இல்லாததால் ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) போட்டிகளைக் கண்டு ரசித்து வருகிறார். அதன்படி, ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் – ஸ்வீடன் போட்டியைக் காண நியூயார்க் சென்றிருந்தார். அங்கு, ஜெய்ஸ்வால் லியோனல் மெஸ்ஸியின் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்து அந்தப் போட்டியை கண்டு ரசித்தார். அங்கிருந்து இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ALSO READ: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி? முழு விவரம் இதோ!

அர்ஜென்டினா போட்டியை கண்டு ரசித்தாரா ஜெய்ஸ்வால்..?

 

View this post on Instagram

 

A post shared by Yashasvi Jaiswal (@yashasvijaiswal28)


யஷஸ்வி ஜெய்ஸ்வால், நாக்-அவுட் சுற்றின் (32 பேர் கொண்ட சுற்று) ஸ்வீடன் – பிரான்ஸ் போட்டியைக் கண்டுகளித்தார். இருப்பினும், அவர் ஸ்வீடன் – பிரான்ஸ் அணிகளின் ஜெர்சியை அணியாமல் அர்ஜென்டினாவின் ஜெர்சியை அணிந்திருந்தார். இதன்மூலம், ஜெய்ஸ்வால் லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் என்பதையும், அர்ஜென்டினாவின் அடுத்த போட்டியையும் காண வரக்கூடும் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

யஷஸ்வியின் கனவு நனவானதா?


ஜெய்ஸ்வால் பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்ற கேப்ஷனில், “உங்களுக்கு விருப்பப் பட்டியல் என்று ஒன்று இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது அதை செய்து முடித்துவிடுங்கள்” என்று எழுதியிருந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியை மைதானத்தில் இருந்து நேரடியாகப் பார்க்க விரும்பினார்.

ALSO READ: ஃபிஃபா வரலாற்றிலேயே கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட அதிக கோல்கள்.. சாதித்த பெல்ஜியம்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் கலந்துகொண்ட போட்டியில், பிரான்ஸ் அணி ஸ்வீடனை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினாவின் 32-வது சுற்றுப் போட்டி, வருகின்ற 2026 ஜூலை 4ம் தேதி மியாமி கார்டன்ஸில் கேப் வெர்டே அணியை எதிர்கொள்கிறது.

Follow Us