AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி? முழு விவரம் இதோ!

FIFA World Cup 2026 Round of 32: பலம் வாய்ந்த பிரான்ஸ், உலக சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய அணிகள் மட்டுமே தங்களது குழுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று, தோல்வியே காணாத சாதனையுடன் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. இத்தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி 'H' குழுவில் நிகழ்ந்தது. அங்கு முன்னாள் உலக சாம்பியனான உருகுவே குழுச் சுற்றிலிருந்தே வெளியேற்றப்பட்டது.

FIFA World Cup 2026: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி? முழு விவரம் இதோ!
ஃபிஃபா உலகக் கோப்பை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2026 20:46 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பை 2026-இன் (FIFA World Cup 2026) குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதனுடன், நாக்-அவுட் போட்டியில் எந்தெந்த 32 அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பதௌ தெரிந்துவிட்டது. இப்போது போட்டியின் விறுவிறுப்பு இன்னும் அதிகரிக்கப் போகிறது. ஏனென்றால் இங்கு செய்யப்படும் ஒரு சிறு தவறு கூட எந்தவொரு அணியின் உலகக் கோப்பையை வெல்லும் கனவையும் தகர்த்துவிடும். இந்தச் சுற்றில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெறும். மேலும் இந்த 16 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். இதன் பொருள், பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற 16 அணிகளின் கனவுகள் இந்தச் சுற்றிலேயே தகர்க்கப்படும் என்பதாகும்.

ALSO READ: தொடர்ந்து 7 உலகக் கோப்பை போட்டிகளில் கோல்.. மெஸ்ஸி படைத்த மற்றொரு உலக சாதனை!

32 அணிகள் தகுதி:

குழு A: மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா
குழு B: சுவிட்சர்லாந்து, கனடா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
குழு சி: பிரேசில், மொராக்கோ
குழு D: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே
குழு E: ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்
குழு F: நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன்
குழு G: பெல்ஜியம், எகிப்து
குழு H: ஸ்பெயின், கேப் வெர்டே
குழு I: பிரான்ஸ், நார்வே, செனகல்
குழு J: அர்ஜென்டினா, ஆஸ்திரியா, அல்ஜீரியா
குழு K: கொலம்பியா, போர்ச்சுகல், DR காங்கோ
குழு L: இங்கிலாந்து, கானா, குரோஷியா

32-வது சுற்றுக்கான அட்டவணை

2026 ஜூன் 29 (திங்கட்கிழமை):

  • தென்னாப்பிரிக்கா vs கனடா (நள்ளிரவு 12:30 மணி)
  • பிரேசில் vs. ஜப்பான் (இரவு 10:30 மணி)

2026 ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை):

  • ஜெர்மனி vs. பராகுவே (பாஸ்டன், அதிகாலை 2:00 மணி)
  • நெதர்லாந்து vs. மொராக்கோ (காலை 6:30 மணி)
  • ஐவரி கோஸ்ட் vs. நார்வே (இரவு 10:30 மணி)

2026 ஜூலை 1 (புதன்கிழமை):

  • பிரான்ஸ் vs. ஸ்வீடன் (காலை 2:30 மணி)
  • மெக்சிகோ vs. ஈக்வடார் (காலை 6:30 மணி)
  • இங்கிலாந்து எதிர் டிஆர் காங்கோ (இரவு 9:30 மணி)

2026 ஜூலை 2 (வியாழக்கிழமை):

  • பெல்ஜியம் vs. செனகல் (காலை 1:30 மணி)
  • அமெரிக்கா vs. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (காலை 5:30 மணி)

2026 ஜூலை 3 (வெள்ளிக்கிழமை):

  • ஸ்பெயின் vs. ஆஸ்திரியா (நள்ளிரவு 12:30 மணி)
  • போர்ச்சுகல் vs. குரோஷியா (காலை 4:30 மணி)
  • சுவிட்சர்லாந்து vs. அல்ஜீரியா (காலை 8:30 மணி)
  • ஆஸ்திரேலியா vs. எகிப்து (காலை 11:30 மணி)

2026 ஜூலை 4 (சனிக்கிழமை):

  • அர்ஜென்டினா vs. கேப் வெர்டே (காலை 3:30 மணி)
  • கொலம்பியா vs. கானா (காலை 7:00 மணி)

ALSO READ: லீக் சுற்றிலேயே வெளியேறிய 2 முறை சாம்பியன் உருகுவே.. திரும்பி வர விமானத்தை ரத்து செய்த நிர்வாகம்!

குழுச் சுற்றில் யார் ஆதிக்கம்?

பலம் வாய்ந்த பிரான்ஸ், உலக சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய அணிகள் மட்டுமே தங்களது குழுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று, தோல்வியே காணாத சாதனையுடன் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. இத்தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி ‘H’ குழுவில் நிகழ்ந்தது. அங்கு முன்னாள் உலக சாம்பியனான உருகுவே குழுச் சுற்றிலிருந்தே வெளியேற்றப்பட்டது. இந்தக் குழுவிலிருந்து, ஸ்பெயினுடன் இணைந்து உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பங்கேற்ற ஒரு சிறிய நாடான கேப் வெர்டே, நாக்-அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்று சரித்திரம் படைத்தது.

Follow Us