AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: தொடர்ந்து 7 உலகக் கோப்பை போட்டிகளில் கோல்.. மெஸ்ஸி படைத்த மற்றொரு உலக சாதனை!

Lionel Messi World Record: தொடர்ச்சியாக 7 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம், தொடர்ச்சியாக 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்திருந்த பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ மற்றும் பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டைன் ஆகியோரின் சாதனையை தற்போது மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

FIFA World Cup 2026: தொடர்ந்து 7 உலகக் கோப்பை போட்டிகளில் கோல்.. மெஸ்ஸி படைத்த மற்றொரு உலக சாதனை!
லியோனல் மெஸ்ஸிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2026 15:47 PM IST

23வது ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) தொடரின் லீக் ஸ்டேஜ் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நாக்-அவுட் சுற்றுக்கான (32 அணிகள் சுற்று) அனைத்து அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், இன்று அதாவது 2026 ஜூன் 28ம் தேதி நடைபெற்ற கடைசி லீக் ஸ்டேஜ் போட்டியில், அர்ஜென்டினா அணி ஜோர்டான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 3வது கோலை அடித்து, தனக்கென ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஜோர்டான் அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்து, இதற்கு முன்பு வேறு எந்த கால்பந்து வீரரும் சாதிக்காத ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்தநிலையில், நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவின் அடுத்த போட்டியானது மிகச்சிறிய நாடான கேப் வெர்டே அணிக்கு எதிராக வருகின்ற 2026ம் ஜூலை 4ம் தேதி நடைபெற உள்ளது.

ALSO READ: விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?

மெஸ்ஸியின் மற்றொரு உலக சாதனை:


இன்றைய போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிரான முதல் பாதி ஆட்ட முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 19-வது நிமிடத்தில் ஜியோவானி லோ செல்சோ முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து 31-வது நிமிடத்தில் லௌதாரோ மார்டினெஸ் கோல் அடித்தார். 2ம் பாதியில் ஜோர்டானின் மூசா அல் முதல் கோலை அடித்தார். 80-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி ஒரு அற்புதமான ஃப்ரீ கிக் மூலம் சரித்திரம் படைத்தார்.

தொடர்ச்சியாக 7 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம், தொடர்ச்சியாக 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்திருந்த பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ மற்றும் பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டைன் ஆகியோரின் சாதனையை தற்போது மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

ALSO READ: ரசிகர்கள் அதிர்ச்சி! நிலநடுக்கத்தில் மிஸ்ஸான குடும்பம்.. சோகத்தில் கால்பந்து வீரர்!

2022ம் ஆண்டு முதல் கோல் மழை:

2022 உலகக் கோப்பையின் நாக்-அவுட் போட்டிகளில் தொடங்கிய மெஸ்ஸியின் கோல் அடிக்கும் தொடர், 2026 உலகக் கோப்பையிலும் தொடர்கிறது. நடப்பு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை சீசனின் முதல் ஆட்டத்தில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்தார். தற்போது மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்கிறார்.

Follow Us