AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: சிறுவயதில் தந்தை மரணம்.. பெயிண்ட் அடித்து வாழ்க்கை ஓட்டம்.. கால்பந்தில் எட்ஜெட் கால் வைத்த கதை!

Ghana footballer Jonas Adjetey: ஜோனாஸ் எட்ஜெட்டின் விளையாட்டு வாழ்க்கை ஒரு கானா கிளப்பில் தொடங்கியது. எட்ஜெட் 2013 முதல் 2019 வரை டெஷே அகாடமிக்காக விளையாடினார். பின்னர் அவர் அக்ரா கிரேட் ஒலிம்பிக்ஸ் அணிக்காக விளையாடச் சென்றார். தொடர்ந்து, ஜோனாஸ் எட்ஜெட் 2021-22ல் கானா பிரீமியர் லீக்கில் அறிமுகமானார்.

FIFA World Cup 2026: சிறுவயதில் தந்தை மரணம்.. பெயிண்ட் அடித்து வாழ்க்கை ஓட்டம்.. கால்பந்தில் எட்ஜெட் கால் வைத்த கதை!
ஜோனாஸ் எட்ஜெட்Image Source: GETTY
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Jun 2026 20:21 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) விளையாடும் பல கால்பந்து வீரர்கள் வறுமையைக் கண்டிருந்தாலும், இன்று உலகம் முழுவதும் தமக்கென ஒரு பெயரை உருவாக்கி வருகின்றனர். அதில், மெஸ்ஸி (Messi), ரொனால்டோ உள்ளிட்ட பல பெயர்கள் ஜாம்பவான் லிஸ்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த ஜாம்பவான் வீரர்களிடம் பணத்திற்கு எந்தக் குறைவும் இல்லை. அந்தவரிசையில், கானா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஜோனாஸ் எட்ஜெட் அத்தகைய வீரர்களில் ஒருவர். ஜோனாஸ் எட்ஜெட் கானா அணிக்காக சென்டர்-பேக் ஆக விளையாடுகிறார். எட்ஜெட் புண்டெஸ்லிகாவில் உள்ள விஎஃப்எல் வோல்ஃப்ஸ்பர்க் அணிக்காகவும் விளையாடுகிறார். தற்போதைய உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜெட் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இந்தநிலையில், ஜோனாஸ் எட்ஜெட் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரெண்ட் அடித்து வருகிறார். இந்தநிலையில், யார் இந்த ஜோனாஸ் எட்ஜெட் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கோல் சாதனை.. மெஸ்ஸியை துரத்தும் எம்பாப்பே.. ஃபிஃபா உலகக் கோப்பையில் விறுவிறுப்பு

யார் இந்த ஜோனாஸ் எட்ஜெட்..?


ஜோனாஸ் எட்ஜெட் கானாவின் அக்ரா நகரில் பிறந்தார். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. ஜோனாஸ் எட்ஜெட் சிறு வயதாக இருக்கும்போதே, அவரது தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதனால், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் ஒரு கூலித் தொழிலாளியாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜோனாஸ் எட்ஜெட் வீடுகளுக்கு வண்ணம் பூசி வந்தார். இதன்போது, தனது வறுமையிலும், குடும்ப சூழ்நிலையிலும் கால்பந்து கொண்ட ஆர்வத்தின் காரணமாக, கால்பந்து பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக எட்ஜெட் அதிகாலை 5 மணிக்கே வேலையை தொடங்குவார். கால்பந்து ஷூ மற்றும் பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக, எட்ஜெட் காலையில் கட்டுமானத் தளங்களில் வேலை செய்வார். அதன் பிறகு, எட்ஜெட் வீடுகளுக்கு வண்ணம் பூசும் ஒப்பந்தங்களை மேற்கொள்வார்.

கால்பந்து வாழ்க்கை தொடங்கியது எப்படி..?

ஜோனாஸ் எட்ஜெட்டின் விளையாட்டு வாழ்க்கை ஒரு கானா கிளப்பில் தொடங்கியது. எட்ஜெட் 2013 முதல் 2019 வரை டெஷே அகாடமிக்காக விளையாடினார். பின்னர் அவர் அக்ரா கிரேட் ஒலிம்பிக்ஸ் அணிக்காக விளையாடச் சென்றார். தொடர்ந்து, ஜோனாஸ் எட்ஜெட் 2021-22ல் கானா பிரீமியர் லீக்கில் அறிமுகமானார். 2022ல், எட்ஜெட் சுவிட்சர்லாந்தில் ஒரு பயிற்சிக்காக சென்று, எஃப்சி பேசல் அணிக்காக விளையாடினார்.

ALSO READ: மெஸ்ஸி தன் கையில் வைத்திருந்த குழந்தை.. இன்று ஃபிஃபா உலகக் கோப்பையில் கோல் அடித்து கலக்கல்!

2024-25ல், ஜோனாஸ் எட்ஜெட்டின் அணி சுவிஸ் சூப்பர் லீக் மற்றும் சுவிஸ் கோப்பையை வென்றது. எட்ஜெட் பேசல் அணிக்காக மொத்தம் 58 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜோனாஸ் எட்ஜெட் தற்போது விஎஃப்எல் வோல்ஃப்ஸ்பர்க் அணிக்காக விளையாடுகிறார். எட்ஜெட் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மாற்றப்பட்டார். அவரது ஆண்டுச் சம்பளம் தற்போது சுமார் 11 கோடி ரூபாய் ஆகும்.

Follow Us