FIFA World Cup 2026: ஜெர்மன் பயிற்சி முகாமிற்குள் வந்த அழையா விருந்தாளி.. பாம்பை பார்த்து பயந்த வீரர்கள்!
Snake in Germany Training Camp: 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் போது, ஜெர்மன் கால்பந்து அணி பயிற்சியின்போது ஒரு பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெர்மன் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டபோது பாம்பு உள்ளே வந்துள்ளது. இருப்பினும், நல்லவேளையாக ஜெர்மன் அணியின் எந்த வீரருக்கும் எதுவும் நடக்கவில்லை.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை (2026 FIFA World Cup) ஏற்கனவே தொடங்கி, கால்பந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு போட்டியும் ரசிகர்கள் விருந்து படைக்கிறது. இந்தநிலையில், 23வது ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் விஷப் பாம்புகளின் அச்சம் குறித்தும் அதிகம் பேசப்படுகிறது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் போது, ஜெர்மன் கால்பந்து அணி (German Football Team) பயிற்சியின்போது ஒரு பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெர்மன் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டபோது பாம்பு உள்ளே வந்துள்ளது. இருப்பினும், நல்லவேளையாக ஜெர்மன் அணியின் எந்த வீரருக்கும் எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றாலும், பயிற்சியில் பாம்புகள் குறித்த அச்சத்தை ஜெர்மனி அணியினர் நேரடியாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து அணியினர் தங்களது பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ALSO READ: 40 வயதில் ஸ்பெயினுக்கு எதிரான நங்கூரம்.. ஒரே நாளில் ஹீரோவான கேப் வெர்டே கோல் கீப்பர்!




பயிற்சி போட்டியில் நடந்தது என்ன..?
Joshua Kimmich reveals that the players encountered a venomous snake around the base camp in Winston-Salem yesterday:
“We saw a snake yesterday, we were told it was venomous. If you get bitten, you have to go to the hospital. I don’t think you’ll die, but it’s certainly… pic.twitter.com/7fKwyWZulP
— Micky Jnr (@MickyJnr__) June 16, 2026
பிபிசி ஸ்போர்ட்ஸுக்கு ஜெர்மன் அணியின் கேப்டன் ஜோஷுவா கிம்மிச் அளித்த பேட்டியில், பயிற்சி முகாமில் பாம்பு காணப்பட்டது குறித்துப் பேசினார். அதில், “ஜெர்மனியில், நாங்கள் எதிரணிக்கு எதிரான வியூகம், எங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி மட்டுமே விவாதித்தோம். ஆனால் இங்கே, புல்லுக்குப் பின்னால் பதுங்கியிருக்கும் ஆபத்து குறித்தும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் பார்த்த அந்தப் பாம்பு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அது கடித்தால் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடலாம், அது நிச்சயமாக ஆபத்தானது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ: அதிரடி காட்டிய மெஸ்ஸி.. ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை!
பயத்தை வெளிப்படுத்திய நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள்:
ஜெர்மன் கேப்டனும் அவரது சக வீரர்களும் ஒரு பாம்பை எதிர்கொண்டது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் போது பாம்புகள் குறித்து பேசிய ஒரே அணி ஜெர்மனி மட்டுமல்ல. நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் அங்குள்ள பாம்புகள் பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சி முகாமைச் சுற்றியுள்ள பகுதியில் விஷப் பாம்புகள் இருப்பதால், அவர்கள் தங்கள் பயிற்சி முகாமை விட்டு வெளியேறவே கூடாது என்று கடுமையான அறிவுறுத்தல்கள் கூட வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பாம்பு தொல்லை காரணமாக, பயிற்சி முகாமுக்கு வெளியே பந்து உதைக்கப்பட்டால் அதை எடுக்க வேண்டாம் என்றும் சுவிஸ் அணிக்கு அறிவுறுத்தப்பட்டது. பாம்புகளைத் தவிர்ப்பதற்காக அந்த அணியினர் மாற்று பந்துகளை பயன்படுத்தி வந்தனர்.